வழுக்கைத்
தலையில் மயிர் முளைக்க …
ஆயிரம்
முறை தைலம் தடவிய பின்னும்
இன்னும்
தடவிக்கொண்டே
இருக்கிறான்
நம்பிக்கையா
? அறியாமையா ?
சிகப்பழகு
கிரீம் தடவித் தடவி முகம்
சிகப்பானதாகச் சரித்திரம்
இல்லை
அனாலும்
கிரீம் விற்பனை குறையவே இல்லை
வியாபார
வெற்றியா ? அறியாமையா ?
எத்தனைமுறை
குரு பெயர்ச்சி வந்தாலும்
நம்
வீட்டில்
மட்டும் எப்போதும் சனிப்பெயர்ச்சிதான்
கடன்
வாங்கி பரிகாரம் செய்து கடனில் மூழ்கினும்
ஜோதிடப்
பொய்மையை
உணர்வதே இல்லை
எண்ணையோ வெண்ணையோ உண்மையோ பொய்யோ
ரீல் சொல்வதையே
வாங்கு ! ரீல் சொல்வதையே நம்பு !
ரீலில் உழன்று ரீலில் மூழ்கி ரீலில் செத்தால் சொர்க்கம்
நிச்சயம்
அல்காரிதமே அனைத்தையும் ஆக்கும் கொடுங்காலம்
....
சுபொஅ.
12 / 05 /26 .
.webp)
0 comments :
Post a Comment