தோழமையான அறிவிப்பு

Posted by அகத்தீ Labels:

 


தோழமையான அறிவிப்பு

 

அன்பான தோழர்களே !

வணக்கம் .

நாளை தேர்தல் முடிவுகள் வந்துவிடும் . திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் .எனக்கு ஐயமில்லை.  

மாநில அரசு புதிய சூழலை , புதிய சவால்களை உறுதியோடு எதிர்கொள்ளத் தயாராக வேண்டும் .

ஒவ்வொரு கட்சியும் மக்கள் நலன் சார்ந்து போராட்டங்களையும் பரப்புரைகளையும் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் .

பாசிச அபாயம் தொடர்வதையும் ; மாநில உரிமைகள் ஆபத்தானக் கட்டத்தை நெருங்குவதையும் ; ஜனநாயக  சமூகப்  பொருளாதாரப்  பண்பாட்டு நெருக்கடிகள் முற்றுவதையும் ; முழுமையாக உள்வாங்கி ஒவ்வொரு நகர்வையும் திட்டமிட வேண்டும் . 

 

நான் தமிழ்நாட்டில் இப்போது குடியிருக்கவில்லை . நேரடி அரசியல் பங்கேற்பும் இல்லை . சமூக வலைதளங்களில் முடிந்தவரை இயங்கி வந்தேன் . இனி இதில் என் பணியை முடிந்தவரை குறைத்துக் கொள்ளலாம் என யோசிக்கிறேன் .

 

ஏனெனில் என் நெடுநாள் கனவான  ஒரு எழுத்துப் பணிக்கு திட்டமிட்டு வருகிறேன் .அதற்கு நிறைய வாசிக்க வேண்டி உள்ளது . தயாரிக்க வேண்டி உள்ளது . நேரம் ஒதுக்க வேண்டி உள்ளது . எனவே சமூக வலைதளங்களில் உலவும் நேரத்தைக் குறைத்துக் கொள்ள விழைகிறேன் .

 

தேவைப்படும்போது சந்திப்பேன் .

 

நன்றி !

 

சு.பொ.அகத்தியலிங்கம் .

03 /05 /26 .


0 comments :

Post a Comment