ஆஞ்சநேயா ! ஆஞ்சநேயா !
உன் பக்தன் ஆகிவிடுகிறேன்
முதியவன் என்னைச்
சுமந்து செல்வாயா ?
ஒரு சாலையில் சந்து பொந்தில்கூட
நடக்க முடியவில்லை
கொத்துப் பரோட்டோ போட்டு
குவித்து வைத்திருக்கிறார்கள் !
என் கவலையை
அனுமானிடம் சொன்னேன்
அவன் என்னிடம் சொன்னான்..
”போடா போடா மூடா !
தேர்தல் வந்தால்தான்
எனக்கு மவுசு
’ அனுமன் சாலிசா’
கட்சிகளுக்கு நினைவுக்கு வரும்
கலவரம் செய்யணும்னா
பஜ்ரங்தள்ன்னு அவனுகளே
கிளம்பீருவானுக !
உன்னை சுமந்து பறந்தால்
என்னை உடைச்சு
ரோட்டில போட்டிருவானுக
எனக்குத் தேவையா ?”
சர்க்காரும் கேட்கல
சாமியும் கேட்கல
மூத்த குடிமக்கள்
எங்கே போய் முட்டுறது ?
சுபொஅ.
14 /05 /26 .

0 comments :
Post a Comment