Posted by அகத்தீ Labels: ,

 சூல் கொண்ட கவிதை 


சூல் கொண்ட கருத்த மேகங்கள்

இங்கே பொழியாமல் எங்கே ஓடுகின்றன ?


மின்னலுக்கு என்ன அவசரம்

வந்த வேகத்தில் திரும்புகின்றன ?


இடிக்கு என்ன கோபம் 

வெடித்து நெஞ்சைக் கலக்குகிறது ?


மழை வருவது போல்

எவ்வளவு நேரம் போக்கு காட்டும் ?


இருட்டுக்கு என்ன சோகம் 

மேலும் கருமைபூசி நிற்கிறது ?


இயற்கையை ரசித்து மகிழ

கவிதை உள்ளம் வேண்டுமோ ?


சுபொஅ.

27/8/2022.

0 comments :

Post a Comment