ஈவு இரக்கம் உள்ளவர்கள் பாக்கியவான்கள்!

Posted by அகத்தீ Labels:

 


ஈவு இரக்கம் உள்ளவர்கள்
பாக்கியவான்கள்!

அவர்கள் நீதிமான்களாக
நியமிக்கப்படமாட்டார்கள் !

நீதியின் மீது பசிதாகம் உள்ளவர்கள்
பாக்கியவான்கள்!

அவர்கள் நீதிமான்களாக
நியமிக்கப்படமாட்டார்கள் !

பதவி பணத்துக்கு ஆசைப்படாதவர்கள்
பாக்கியவான்கள்!

அவர்கள் நீதிமான்களாக
நியமிக்கப்படமாட்டார்கள் !

சாதி மத பித்தில்லாதவர்கள்
பாக்கியவான்கள்!

அவர்கள் நீதிமான்களாக
நியமிக்கப்படமாட்டார்கள் !

அதிகார ஆதிக்கதிற்கு
அடிபணியாதவர்கள் பாக்கியவான்கள்!

அவர்கள் நீதிமான்களாக
நியமிக்கப்படமாட்டார்கள் !

அவர் நியமிக்கப்பட்ட நீதிமான்
மனிதத்தை எதிர்பார்க்கலாமா ?

சுபொஅ.
24/8/2022.
s
Like
Comment
Share

0 comments :

Post a Comment