இயற்கையும் பயங்கரவாதியோ!

Posted by அகத்தீ Labels:

 

இயற்கையும் பயங்கரவாதியோ!

 

 


கொதிக்கும் வெயில் கண்டு

சூரியனை சபிப்பாயோ ?

சூரியன் அணைந்துவிட்டால்

பிரபஞ்சத்தின் கதி என்ன ?

 

கொட்டும் மழை கண்டு

வானத்தை சபிப்பாயோ ?

வானம் பொய்த்துவிட்டால்

குடிப்பதற்கும் வழியுண்டோ ?

 

கொந்தளிக்கும் சுனாமி கண்டு

கடலைச் சபிப்பாயோ ?

கடலும் வற்றி வறண்டுவிட்டால்

கற்பனையே மிரட்டுமன்றோ ?

 

இயற்கை பெருங் கொடையே

சீற்றங்கள் அதன் இயல்பே

சீற்றங்கள் எப்போது எழும் ? - அநீதி

சகிக்க முடியாத போதன்றோ ?

 

 

காட்டை அழிக்கவும் எல்லை உண்டு

பூமியை தூர்க்கவும் எல்லை உண்டு !

குப்பையைக் கொட்டவும் எல்லை உண்டு !

எல்லைமீறின் இயற்கையும் பயங்கரவாதியே!

 

இயற்கையை புரிந்திடுக – மனிதா!

இயற்கையோடு இயைந்து வாழ்க !

அணைத்தால் இனிக்கும் இயற்கை!

பகைத்தால் அழிக்கும் இயற்கை !

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

7/4/2022.

0 comments :

Post a Comment