பசியாப்
பழம்
பாட்டிசொன்ன
செய்திகள்
பசுமையாய்
நினைவுத்திரையில்
ஒன்று
தின்றால் போதுமாம்
ஆயுளுக்கும்
பசி எடுக்காதாம்
ராமர்
வனவாசம் போகையில்
இதைத்தான்
சாப்பிட்டாராம்
எந்தப்
பருவத்தில் எங்கே விளையும்
?
யாருக்கும்
இங்கே தெரியவில்லை .
ஏடுகள்
தேடிச் சலித்தேன்
எந்தக்
குறிப்பும் அகப்படவில்லை
கல்வெட்டில்
இருக்குமோ ?
தொல்லியியலாளர்
கைவிரிக்கின்றனர்
ஒரு வேளை
அமைச்சர்
அறிந்திருக்கக்
கூடுமோ ?
தகவல்
அறியும் உரிமைச் சட்டத்தில்
கேட்டுப்
பார்ப்போமா ?
ஆதர்
அட்டையும் பான் கார்டும்
அவசியம்
காட்டவேண்டுமோ ?
கனவும்
குழப்பமுமாய் நாட்கள்
நகர்ந்ததன்றி
ஒரு தடயமும் சிக்கவில்லை
காய்த்திரி
மந்திரம் ஜெபிக்கும் பெரிய
மூளைக்காரருக்கு
அறிந்திருப்பாரோ ?
சூத்திரன்
அதைத் தின்பதற்கு
சாஸ்திரங்கள்
அனுமதிக்குமோ ?
எது எப்படியோ
என்னுள் பேராசை
பெருவெள்ளமாய்
மடைகடக்கிறது
பசியாப்
பழம் எமக்கு கிடைத்துவிட்டால்
பசிவயிற்றைக்
கிள்ளாதாகையால்
வேலைக்கு
அலைய வேண்டாம்
விலைவாசிக்கு
கலங்க வேண்டாம்
போராடவும்
தேவையில்லை
போராடத்
தூண்டவும் தேவையில்ல .
ஆனாலும்
ஒரு சந்தேகம்
ஜி எஸ் டி
வரி உண்டா ?
-
சு.பொ.அகத்தியலிங்கம்
.
0 comments :
Post a Comment