சிறார் நூல் இரண்டு

Posted by அகத்தீ Labels:

  சிறார் நூல் இரண்டு





 பாட்டா ! ஒருத்தரு பலவீனமா இருக்கும்போது அவர் கிட்ட சண்டை போட்டு ,குறுக்கு வழியில் ஜெயிக்கக் கூடாது.சண்டை போடாம விலகிப் போயிடணும் .அதுக்காக எதை இழந்தாலும் பரவாயில்லையின்னு நினைச்சதுதான் பெரிய வீரம்…..”

 

இப்படி வீரத்துக்கு இலக்கணம் சொல்லிக் கொடுக்கும் “ ஆகச் சிறந்த வீரன்” சிறுகதை உள்ளிட்டு வெவ்வேறு செய்திகளைச் சொல்லும் 12 சிறார் கதைகளின் தொகுப்பே “ ஆகச் சிறந்த வீரன்” .

 

எழுதியவர் துரை ஆனந்த்  குமார் . இவர் ஏற்கெனவே இதுபோல் பல நூல்களைத் தந்தவர் .எழுத்தில் ஈர்ப்பும் செய்தியும் ஒருங்கே கலந்திருப்பதே இக்கதைகளின் வெற்றி என்பதை வாசிக்கும் போது நிச்சயம் உணர்வீர்கள்.

 

“ வாருங்கள் பொழுது போக்கையும் வாசிப்பையும் ஒன்றாக இணைப்போம் “ என்கிற முழக்கத்துடன் செயல்படும் இவரை ஊக்குவிப்பது நம் கடன் .

 

ஆகச்சிறந்த வீரன் ,

துரை ஆனந்த் குமார் ,

டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ் ,

பக்கங்கள் : 80 , விலை : ரூ.100/

நூல்பெற : 87545 07070 / 99404 46650


*******************************************************************

கதை சொல்லுவது சிறுமி ச.ச.சுபவர்ஷினி [வயது 9] , ஓவியங்கள் வரைந்தது ஏழு சிறுவர் சிறுமியர் .  “அத்தினிக் காடுகள்” நூல் நம்மை வியக்க வைக்கிறது .அன்பின் ஊற்று நிறைந்த எழுத்துகள் . 15 குட்டிக் கதைகள் .ஒவ்வொன்றும் குழந்தையைக் கவ்வி இழுக்கும் .

 

ஓர் சிறுமி சிங்கத்தை பிரச்சனையில் இருந்து காப்பாற்றுகிறாள் .அந்தக் சிறுமியின் சொல் கேட்டு தன்னிடம் சிக்கிய யானைக்குட்டியை தின்னாமல் விடுகிறது சிங்கம் . “ நீங்க வலிமையான விலங்கு ஆபத்தை தைரியமாகச் சந்திக்கணும்” என யானைக்கு சொல்லும் சிறுமியின் ஈரம் மனது  ‘அத்தினிக் காடு’ எனும் சிறுகதை ஆகியிருக்கிறது .

 

 “டால்பின் நம்ம கூட பழகுவதற்காக விளையாட்டு காட்டும் .அதோட இடத்தில இருந்தாத்தான் அது சந்தோஷமா பாதுகாப்பா இருக்கும்,” என சொல்லும் சிறுகதை ‘ டால்பின்”.

 

மற்ற கதைகளை நீங்களே படித்து மகிழுங்கள் . எந்தக் கதையும் மூடநம்பிக்கையை விதைக்கவில்லை . ‘இளமையில் கல்’ என்றனர் அதோடு இனி  ‘சிறுவராயினும் எழுது’ என்றும் சொல்லலாம் ; அந்த நம்பிக்கையைத் தந்திருக்கிறது இந்நூல் . சித்திரமும் கைப்பழக்கம் ,செந்தமிழும் எழுத எழுத பழகும் . ஊக்குவித்து உடன் இருந்த அனைவருக்கும் பாராட்டுகள் .

 

அத்தினிக் காடு,

சிறுவர் கதைகள்,

லாலிபாப் சிறுவர் உலகம் வெளியீடு ,

பக்கங்கள் : 104 , விலை : ரூ99/

நூலைப்பெற : 98412 36965 . 

0 comments :

Post a Comment