கொஞ்சம்
சுயதப்பட்டம் … என் நூல்கள் 27 டிசம்பர் 2021.
[27/12/2021
அன்று எழுதிய ஐந்தொகைக் கணக்கு ]
சென்னைப் புத்தகத்
திருவிழா நெருங்க நெருங்க , தன் புத்தகம் பற்றி பேசாவிட்டால் எழுத்தாளர் இல்லை என
ஒதுக்கிவிடுவார்களே…………. என்ன செய்ய ?
“மன்னுடை மன்றத் தோலைத் தூக்கினுந்
தன்னுடை யாற்ற லுணரா ரிடையினும்
மன்னிய அவையிடை வெல்லுறு பொழுதினுந்
தன்னை மறுதலை பழித்த காலையுந்
தன்னைப் புகழ்தலுந் தகும்புல வோற்கே. [ நன்னூல்.55]”
இன்றைய சூழலோடு இதற்கு உரைசெய்வதாயின்
,
“ அரசுக்கு எழுதும் விண்ணப்பத்திலும் – தன்னைப் பற்றி
சரியாக உணராதவர்கள் புரிந்து கொள்ளாதவர் மத்தியிலும் – போட்டி களத்தில் தன்னை நிறுத்தவும்
– தன்னை பிறர் இழித்தோ பழித்தோ உண்மையை மறுத்தோ பேசும் பொழுதும் ; ஒருவர் தன் தகுதியை
நிலைநாட்டவோ , தெரியாதோருக்கு தெரிவிக்கவோ தன் பெருமையை சொல்லலாம்” என்கிறது நன்னூல்
.
எம்
இயக்கப் பணியையோ பொதுப் பணியையோ பட்டியிலிடப் போவதில்லை . அதனைப் பற்றி பேச
இப்போது அவசரமும் இல்லை ..அவற்றை இரங்கற் குறிப்பு எழுதுவோருக்கு விட்டுவிடுகிறேன்
. என் எழுத்துப் பணியைச் சார்ந்தே இப்போது பேசுகிறேன்.
நான்
எழுதியவை குறித்து நானே பட்டியல் போடுவது தற்புகழ்ச்சி ஆகிவிடுமே என இதுவரை
தவிர்த்து வந்தேன் . நண்பர் சிலரின் வேண்டுகோளுக்கும் வற்புறுத்தலுக்கும்
இணங்கவும் ,சிலரின் கேள்விகள் என்னை உசுப்பிவிட்டதாலும் இங்கே தொகுத்துவிட்டேன்
என் நினைவுக்கு எட்டியவரை .
நான் என் பெருமையை பீற்றவில்லை . நான்
எழுதியவற்றைத் தொகுத்துள்ளேன் கீழே பட்டியலும் விபரமுமாய் தகவலுக்காக அவ்வளவுதான்…..
நான் சார்ந்த இயக்கத்தின்
கருத்துகளத்தில் நின்று பரப்புரை செய்யும் எழுத்தாளனே . நடுநிலையாளன் அல்ல ;ஓர்
சார்பானவனே ! என் எழுத்து எப்போதும் கடைசி பெஞ்ச் மாணவனை நோக்கித்தான் . அதுதான்
என் இலக்கும் பயணமும் …
1) சிந்திக்கும் வேளையில் குறள் [1994]
2) விடுதலைத் தழும்புகள் (தமிழக அரசு முதல் பரிசு)
[1998]
3) மனித உரிமைகள் வரலாறும் அரசியலும்( திருப்பூர் தமிழ்சங்க விருது)[1998]
(மேற்கண்ட இரு நூல்களும் கல்லூரிகளில் பயன்படுத்தப்படுகிறது)
4) என் கேள்விக்கு என்ன பதில்?( குழந்தைகள் அறிவியல் நூல்)(பல ஆயிரம் பிரதிகள் விற்கப்பட்டன. தமிழ்நாடு அறிவியல்
இயக்கத்தால் அச்சிடப்பட்டது)
5) சாதியம் வேர்கள் விளைவுகள் சவால்கள்[2004]
6) ஆப்கன் வரலாறும் அமெரிக்க வல்லூறும் [2002]
மீண்டும்
2020 ல் விரிவாக்கப்பட்ட பதிப்பு
7) காதலும் வாழ்வும்-பழந்தமிழ் இலக்கியத்தில்[2002]
8] சு.சமுத்திரம் படைப்புலகம்[2002]
9) சிங்காரவேலரைப் பயில்வோம் [2008]
10] கீதை தரும் மயக்கம் [2008]
11)பொதுவுடைமை வளர்த்த தமிழ் [ஜூன் 2010 ]
12] ஆர்.உமாநாத் வாழ்க்கை வரலாறு ; பார்வை புதிது பயணம் நெடிது [ செப்டம்பர் 2000 ]
13]
பூக்களோடும் போர்முரசுகளோடும் . DYFI வரலாறு .
14] கோடிக்கால் பூதமடா ; ஜீவாவின் கவிதைப் பயணம்[2011]
கீழ்கண்ட
நூல்கள் 2013 ல் கட்சிப் பொறுப்புகளைத் துறந்தபின் எழுதியது
15]குடும்பத்தில் கூட்டாட்சி[2013]
16] நாத்திகம் vs ஆத்திகம் : அர்த்தமுள்ள உரையாடல்[2015]
17] சே குவேரா : கனல் மணக்கும் வாழ்க்கை [2015]
18]100 கேள்வி-பதில் : ஆன்மீகமா ? அறிவியலா ?
[2016]
19] சும்மா கிடந்த சொல்ல எடுத்து : என்றும் நம்மோடு பட்டுக்கோட்டை [2017]
20]புரட்சிப் பெருநதி [2018]
21]மார்க்சியம் என்றால் என்ன ? : ஓர் தொடக்க நிலைக் கையேடு[2018]
22] கனவிலிருந்து
அறிவியலாய் சோஷலிசம் : ஓர் எளிய முன்னோட்டம்.[2021]
ü பாசிசம் பழசும் புதுசும் [அஜய்
அஹமதுவின் சிறு நூலை தமிழில் மொழியாக்கம் செய்துள்ளேன்.]
மேலும் பல
சிறு நூல்கள் – இதுவரை எழுதியவை
v வேலை இன்மை ஒழிய எரிமலையாய் எழுக ![1978] SYF வெளியீடு
v மனிதனாக வேண்டும் மனதில் வையடா !DYFI
வெளியீடு
v வேலை இனியும் கனவல்ல
[1990] CCAU வெளியீடு
v வீட்டைக் கொழுத்தி வெளிச்சம் பெறுவரோ – மின் ஊழியர் மத்திய
அமைப்பு வெளியீடு
v மூடநம்பிக்கை என்றால் என்ன ? பாரதி புத்தகாலய வெளியீடு
v அறிவியல் பார்வை என்றால் என்ன ?[2021]
v தகவல் அறியும் உரிமைச் சட்டம்
v தோழர் பி.ராமமூர்த்தி
v காதெலென்னும் உயிர்விசை [2015] DYFI வெளியீடு
v கருத்து சுதந்திரம் - வெறும் சட்டச் சொல் அல்ல [2015]
v மத்திய அரசிடம் எதிர்பார்ப்புகள்
v விடிவுகாண விழித்தெழு
உட்பட டஜனுக்கும் மேற்பட்ட
சிறு
நூல்கள்
·
விடுதலை வேள்வியில் தமிழகம்[2000] ,
·
விடுதலைப்
போராட்டம் கம்யூனிஸ்டுகளின் நினைவுகள் [2014]ஆங்கிலத் தொகுப்பில் .மொழியாக்கமும்
வந்துள்ளது
·
சிங்காரவேலர்
போன்ற பல தொகுப்பு நூல்களில் தகுந்த பங்களிப்பு .
தீக்கதிர்
,செம்மலர் , இளைஞர் முழக்கம் , மகளிர் சிந்தனை , சிஐடியு செய்திகள்
,போக்குவரத்துத் தொழிலாளி ,புதிய புத்தகம் பேசுது, விழிப்பு ,சிவந்த சிந்தனை ,
நோக்கு , நந்தன் ,சிகரம் ,பீப்பிள்ஸ் டெமாக்கரசி ,மார்க்சிஸ்ட் , வலைப்பூ மற்றும்
வலைதளங்கள் உட்பட பல ஏடுகளில் எழுதியுள்ள
கட்டுரைகள் ,கவிதைகள் ,படைப்புகள் .
நான்
எழுதிய கவிதைகள் , சொற்கோலம் முதலியன
இன்னும் தொகுப்படவும் இல்லை . நூலாக்கம் பெறவே இல்லை. நான் எழுதியவற்றில்
நூல் வடிவம் பெறாதவை நிறைய உண்டு .சேமித்து வைக்கவே இல்லை .
[ akatheee.blogspot.com ல் பிரசுரிக்கப்படாத என்
எழுத்துகள் பல இருக்கும்.]
சு.பொ.அகத்தியலிங்கம்.
27/12/2021.
0 comments :
Post a Comment