சுபொஅ 2022 சுயவிபரம்.

Posted by அகத்தீ Labels:

 

சு.பொ. .விவரம்

 

குறிப்பு :

 

நான் உடல்தானம் செய்துள்ளேன். என் மரணத்துக்குப் பிறகு உடலை மருத்துவ கல்லூரியில் ஒப்படைக்கப்பட வேண்டும் . சாதி ,மத ,குடும்ப ரீதியான எந்தச் சடங்கும் சம்பிரதாயமும் கூடாது . விபூதி ,குத்து விளக்கு ,அகல் விளக்கு ,தேங்காய் ,பழம் ,ஊதுவத்தி , பிறந்தவீட்டுக் கோடி ,சம்மந்தி கோடி,கொள்ளிச் சட்டி ,பால்,கருமாதி,படையல் எதுவும் கூடாது . இது என் இறுதி ஆசை.உயில்.

 

 

 

 

பெயர்சுபொஅகத்தியலிங்கம்

தந்தைநாபொன்னப்பபிள்ளை 

தாய்சி.தங்கம்மாள்

பிறந்ததேதி: 15 ஜூன் 1953 சுசீந்திரம்குமரிமாவட்டம்

உடன்பிறந்தோர் : காமாட்சி [அக்கா ] சு.பொ. நாராயணன் ,[அண்ணன்] சு.பொ.ஐயப்பன் [தம்பி]

கல்விஎஸ்எஸ்எல்.சி + .டி, [டூல் அண்ட் டை மேக்கர்]

திருமணநாள் : 25 அக்டோபர் 1981

மனைவிசி.கலாவதி M.A., ஆசிரியை

 

மகள்  : .அ .க . பானு / மருமகன் :. நவீன் குமார்

 

மகள் : அ .க .சங்கர் / மருமகள் : பா. சரண்யா ,

 

பெயரன் /பெயர்த்தி .பா .சஞ்சை ஹஷ்மி .பா.சங்கமித்ரா ,

                                                   ..முகிலன் ..மேகா

 

 

 

தொழில்

கட்சி முழுநேர ஊழியர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி [ மார்க்சிஸ்ட் ], 

பத்திரிகையாளர் , எழுத்தாளர் .ஐந்தாம் வகுப்புவரை சுசீந்திரம் அரசு நடுநிலைப் பள்ளியிலும் ,

முதல் 10 முடிய சுசீந்திரம் எஸ் எம் எஸ் எம் உயர்நிலைப் பள்ளியிலும் ,

பள்ளியிறுதி வகுப்பு [11 ஆம் வகுப்பு ] சென்னை ,குரோம்பேட்டை நேரு போர்ட் உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றார் . 

 

தொழிற்கல்வி [ஐடிஐடூல் அண்ட் டை மேக்கர் பிரிவு – கிண்டி சிடிஐயிலும் பயின்றார் . 

 

ஹிந்துஸ்தான் டெலிபிரண்டர்ஸில் அப்ரண்டீஸ் முடித்தார் . 

 

இங்கிளீஸ் எலக்ட்ரிகல்ஸ் , பெஸ்ட் அண்ட கிராம்டன் லிப்ட் கம்பெனி உட்பட சில கம்பெனிகளில் பணியாற்றினார் . 

 

அரசியல் மற்றும் இலக்கிய ஈடுபாடு அதிகரிக்க வேலையை விட்டார் .

 

 

 

அரசியல் வாழ்வு :

 

 

* 1974 
ல் இந்திய கம்யூனிஸ்ட் [மார்க்சிஸ்ட்கட்சி ஆதரவாளர் குழுவில் இணைந்தார் . 1975 ல் கட்சியில் பரிட்சார்த்த உறுப்பினர் ஆனார் . 

அடுத்த ஆண்டு கட்சியின் உறுப்பினரானார்..

* 1977முதல் கட்சியின் முழுநேர ஊழியர்  . 

* 1976 ல் பழவந்தாங்கலில் சோஷலிஸ்ட் வாலிபர் முன்னணி அமைப்பதில் முன் நின்றார் . முதல் செயலாளர் . பின் மாவட்ட அமைப்பாளர்

.1977 ல் சோஷலிஸ்ட் வாலிபர் முன்னணியின் சென்னை மாவட்ட செயலாளர். 

1978 முதல் சோஷலிஸ்ட் வாலிபர் முன்னணியின் மாநில அமைப்பில் செயல்படத் துவங்கினார் . மாநில துணைச் செயலாளராக திருப்பூர் மாநில மாநாட்டில் தேர்வு.

 

1980 ல் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் என பெயர் மாற்றம் பெற்றது .திண்டுக்கல் மாநில மாநாட்டில் மாநிலச் செயலாளராகத் தேர்வு.

1992 ஆம் ஆண்டு வரை மாநிலப் பொறுப்பில் பணியாற்றினார் . கடைசி இரண்டு         ஆண்டுகள் மாநிலத்தலைவராகவும் ; அதற்கு முன் மாநிலச்செயலாளராகவும் துடிப்பாகப் பணியாற்றினார்.

 

* 1984 ஆம் ஆண்டு இளைஞர் முழக்கம் மாத இதழ் தொடங்கப் பெற்றது . தொடக்கம்   முதல் எட்டு ஆண்டுகள் அதன் ஆசிரியராகவும் பணியாற்றினார் .

 

* 1984 ஆம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற கட்சியின் மாநிலமாநாட்டில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் . அதற்கு முன் கட்சியின் சென்னை மாவட்டக்குழு உறுப்பினராக செயல்பட்டார் .

 

27 ஆண்டுகளுக்கு மேலாக  கட்சி மாநிலக் குழுவில் செயல்பட்ட பின் , 2012 ஆம்         ஆண்டு நாகையில் நடைபெற்ற மாநிலமாநாட்டில் தானே சுயவிருப்பம் தெரிவித்து மாநிலக்குழுவிலிருந்து விடுவித்துக் கொண்டார் ..  [90 முதல் 94 வரை கட்சியின்       சென்னை மாவட்டச் செயற்குழுவிலும் செயல்பட்டார் .]

 

* 1978 ஆம் ஆண்டு முதல் தீக்கதிரில் சென்னை மாவட்ட நிருபராகப் பணிபுரிந்துள்ளார்.1994 ல் சென்னைப் பதிப்பு துவங்கப்பட்டபோது பொறுப்பாசிரியர் ஆனார் . பின்னர்       இணையாசிரியராகவும் பொறுப்பேற்று செயல் பட்டார் . மாநிலம் முழுவதும் நன்கு  அறியப்பட்ட ஸ்தாபகனாய் , அமைப்பாளனாய் ,கிளர்ச்சிக்காரானாய் , பேச்சாளராய் திகழ்ந்தவர்  ஒரு வட்டத்துக்குள் அடைக்கப்பட்டது இப்போதுதான் . தன் சாவுக்குப்     பிறகும் தன்னைப் பற்றிப் பேசும் பல புத்தகங்கள் எழுத களம் அமைந்ததும் இப்போதுதான் .

 

 

 2012 ல் தீக்கதிர் பொறுப்புகளிலிருந்தும் சுயவிருப்பத்தின் அடிப்படையில் விலகினார் .

 

2013 டிசம்பர் 8 ஆம் நாள் முழுநேர ஊழியர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் சுய விருப்ப அடிப்படையில் விடுவித்துக்கொண்டார் . 

 

ஓசூரில் ஒரு கிளையில்   சிபிஎம் உறுப்பினராகத் தொடர்கிறார்.

 

 

எந்த பொறுப்பிலும் இல்லாவிடினும் பொறுப்புடன் எழுத்துப் பணியும் கிளர்ச்சிப் பிரச்சாரப் பணியும் தொடர்கிறார்

 

அவசர காலத்தில் தமுஎகச வில் ஆர்வமுடன் பங்கேற்கத் துவங்கி மாவட்ட – மாநிலப் பொறுப்புகளிலும் செயல் பட்டார் . தீக்கதிர் பணியில் உள்ள பலரும்                   தமுஎகச விலும் பணியாற்றுவதினால் பணி நெருக்கடி ஏற்பட்டது . கட்சி ஆலோசனைப்படி தமுஎகச விலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார் . அதற்கு முன்பு இலக்கியக் கூட்டங்கள் , கலை இரவுகளில் பங்கேற்றுள்ளார் .இலக்கிய ஆர்வம் தொடர்கிறது . .

 

 

 

நான் சார்ந்த இயக்கத்தின் கருத்துகளத்தில் நின்று பரப்புரை செய்யும் எழுத்தாளனே . நடுநிலையாளன் அல்ல ;ஓர் சார்பானவனே ! என் எழுத்து எப்போதும் கடைசி பெஞ்ச் மாணவனை நோக்கித்தான் . அதுதான் என் இலக்கும் பயணமும்

 

 

 1) சிந்திக்கும் வேளையில் குறள் [1994]


 2) விடுதலைத் தழும்புகள் (தமிழக அரசு முதல் பரிசு) [1998]


3) மனித உரிமைகள் வரலாறும் அரசியலும்திருப்பூர் தமிழ்சங்க விருது)[1998]
(
மேற்கண்ட இரு நூல்களும் கல்லூரிகளில் பயன்படுத்தப்படுகிறது)


4) என் கேள்விக்கு என்ன பதில்?( குழந்தைகள் அறிவியல் நூல்)(பல ஆயிரம் பிரதிகள்  விற்கப்பட்டனதமிழ்நாடு அறிவியல்
இயக்கத்தால் அச்சிடப்பட்டது)

 

5) சாதியம் வேர்கள் விளைவுகள் சவால்கள்[2004]


 
6) 
ஆப்கன் வரலாறும் அமெரிக்க வல்லூறும் [2002] 

மீண்டும் 2020 ல் விரிவாக்கப்பட்ட பதிப்பு


7) காதலும் வாழ்வும்-பழந்தமிழ் இலக்கியத்தில்[2002]

 

8] சு.சமுத்திரம் படைப்புலகம்[2002]


 
9) 
சிங்காரவேலரைப் பயில்வோம் [2008]

 

10] கீதை தரும் மயக்கம் [2008]11)பொதுவுடைமை வளர்த்த தமிழ் [ஜூன் 2010 ]

 

12] ஆர்.உமாநாத் வாழ்க்கை வரலாறு ; பார்வை புதிது பயணம் நெடிது [ செப்டம்பர் 2000 ]

 

13] பூக்களோடும் போர்முரசுகளோடும் . DYFI வரலாறு .


 
14] 
கோடிக்கால் பூதமடா ; ஜீவாவின் கவிதைப் பயணம்[2011]

 

கீழ்கண்ட நூல்கள் 2013 ல் கட்சிப் பொறுப்புகளைத் துறந்தபின் எழுதியது


 

15]குடும்பத்தில் கூட்டாட்சி[2013]


16] நாத்திகம் vs ஆத்திகம் : அர்த்தமுள்ள உரையாடல்[2015]  


17] சே குவேரா : கனல் மணக்கும் வாழ்க்கை [2015]


18]100 கேள்வி-பதில் : ஆன்மீகமா ? அறிவியலா ? [2016]


19] சும்மா கிடந்த சொல்ல எடுத்து : என்றும் நம்மோடு பட்டுக்கோட்டை [2017]


20]புரட்சிப் பெருநதி [2018]

 

21]மார்க்சியம் என்றால் என்ன ? : ஓர் தொடக்க நிலைக் கையேடு[2018]

 

22] கனவிலிருந்து அறிவியலாய் சோஷலிசம் : ஓர் எளிய முன்னோட்டம்.[2021]

 

 

ü  பாசிசம் பழசும் புதுசும் [அஜய் அஹமதுவின் சிறு நூலை தமிழில் மொழியாக்கம் செய்துள்ளேன்.]மேலும் பல சிறு நூல்கள்இதுவரை எழுதியவைv  வேலை இன்மை ஒழிய எரிமலையாய் எழுக ![1978] SYF வெளியீடு


v  மனிதனாக வேண்டும் மனதில் வையடா !DYFI வெளியீடு


v  வேலை இனியும் கனவல்ல  [1990] CCAU வெளியீடு


v  வீட்டைக் கொழுத்தி வெளிச்சம் பெறுவரோமின் ஊழியர் மத்திய அமைப்பு வெளியீடு


v  மூடநம்பிக்கை என்றால் என்ன ? பாரதி புத்தகாலய வெளியீடு

 

v  அறிவியல் பார்வை என்றால் என்ன ?[2021]

 

v  தகவல் அறியும் உரிமைச் சட்டம் 


v  தோழர் பி.ராமமூர்த்தி 


v  காதெலென்னும் உயிர்விசை [2015] DYFI வெளியீடு


v  கருத்து சுதந்திரம் - வெறும் சட்டச் சொல் அல்ல [2015]

 

v  மத்திய அரசிடம் எதிர்பார்ப்புகள்

 

v  விடிவுகாண விழித்தெழு

 

உட்பட டஜனுக்கும் மேற்பட்ட 
சிறு நூல்கள்
 
 

 

 

·         விடுதலை வேள்வியில் தமிழகம்[2000] , 

 

·         விடுதலைப் போராட்டம் கம்யூனிஸ்டுகளின் நினைவுகள் [2014]ஆங்கிலத் தொகுப்பில் .மொழியாக்கமும் வந்துள்ளது

·         சிங்காரவேலர்  போன்ற பல தொகுப்பு நூல்களில் தகுந்த பங்களிப்பு .

 

 

தீக்கதிர் ,செம்மலர் , இளைஞர் முழக்கம் , மகளிர் சிந்தனை , சிஐடியு செய்திகள் ,போக்குவரத்துத் தொழிலாளி ,புதிய புத்தகம் பேசுது, விழிப்பு ,சிவந்த சிந்தனை , நோக்கு , நந்தன் ,சிகரம் ,பீப்பிள்ஸ் டெமாக்கரசி ,மார்க்சிஸ்ட் , வலைப்பூ மற்றும் வலைதளங்கள்  உட்பட பல ஏடுகளில் எழுதியுள்ள கட்டுரைகள் ,கவிதைகள் ,படைப்புகள் .

 

 

நான் எழுதிய கவிதைகள் , சொற்கோலம் முதலியன  இன்னும் தொகுப்படவும் இல்லை . நூலாக்கம் பெறவே இல்லை. நான் எழுதியவற்றில் நூல் வடிவம் பெறாதவை நிறைய உண்டு .சேமித்து வைக்கவே இல்லை .

 

[ akatheee.blogspot.com ல் பிரசுரிக்கப்படாத என் எழுத்துகள் பல இருக்கும்.]

 

§  சென்றுவந்த நாடுகள் : 

ரஷ்யா [ உலக இளைஞர் விழா – மாஸ்கோ ], சீனா [ கட்சி ஊடக தூது குழு ]இலக்கியப்பேச்சாளர் , எழுத்தாளர்
இடதுசாரி சிந்தனையாளர்தற்போதைய முக்வரி :
:
சு.பொ.அகத்தியலிங்கம்
B 405 , 
நான்காவது தளம், B பிளாக்,
கார்டன் ரெசிடென்ஸி ,
போலீஸ் லே அவுட் அனுமார் கோவில் அருகில்]

       காச்சநாய்க்கன்ஹள்ளி
              
       பொம்மசந்திரா தொழிற்பேட்டை அஞ்சல் ,
       பெங்களூரூ-560 099.

SU .PO . AGATHIYALINGAM ,
B - 405 FOURTH FLOOR - 'B' BLOCK,
GARDEN RESIDENCY.
[NEAR - HANUMAN TEMPLE = POLICE LAY OUT]
kachanaikenhalli
BOMMASANDRA ,INDUSTRIAL ESTATE POST
BENGALURU - 560 099.

அலை பேசி :

9632562964

மின்னஞ்சல் :

agathee2007@gmail.com

வலைப்பூ :

akatheee.blogspot.com

facebook ; su po agathiyalingam

whatsup ; 9632562964

twitter ;supo agathiyalingam@supo agatheeஅறிவைத் தேடிக்கொண்டே இரு
அநீதியை எதிர்த்துக்கொண்டே இரு

 

 

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

28/12/2021 ல் புதுப்பிக்கப்பட்ட விவரம்.

          

 

 

 

 

 

0 comments :

Post a Comment