பொறுப்பு துறப்பு :

Posted by அகத்தீ Labels:

 பொறுப்பு துறப்பு :



நீங்களே என்னைப் படைத்தீர்கள் !
நீங்களே கதை புனைந்தீர்கள்!
நீங்களே கூறுபோட்டீர்கள்!
நீங்களே கொண்டாடினீர்கள் !
நீங்களே மோதவிட்டீர்கள் !
நீங்களே ஏமாந்தீர்கள் !
நீங்களே ஏமாற்றினீர்கள்!
நேற்றும் இன்றும் நாளையும்
தீதும் நன்றும் என் செயல் அல்ல
உம் செயலே ! என்றும் உம் செயலே !
யாதொன்றுக்கும் என்னை நோகவேண்டாம்
எதுவும் என் செயல் அல்ல என் கையில் இல்லை
புத்தாண்டு வாழ்த்துச் சொல்லி
என் பொறுப்பு துறக்கிறேன்
இவண் ,உங்கள்
கடவுள்
[ எல்லா மதம் பிரிவு உபபிரிவு ...]

0 comments :

Post a Comment