திணிப்பவராகவும்
திணிக்கப்படுபவராகவும்
சாக்கலேட்டுக்கு
அழதபோது
பருப்புசாதம் திணித்தனர்
விளையாட ஓடியபோது
வீட்டுப்பாடத்தைத்
திணித்தனர்
எதையோ படிக்க விரும்பியபோது
எதையோ திணித்து
படி என்றனர்
படிப்புக்கு சம்மந்தமே
இன்றி –சம்பளத்துக்கு
வேலையில் திணிக்கச்
செய்தனர்
காதலைக் கிள்ளி
எறிந்து
கல்யாணத்தைத் திணித்தனர்
அன்றிலிருந்து
அவரே திணிப்பவராகவும்
திணிக்கப்படுபவராகவும்
மாறிப்போனார்
எல்லோரும் குடும்பஸ்தன்
என்றனர்
வாழ்க்கை ஒழுங்காக
ஓடிக்கொண்டிருப்பதாய்
எல்லோரும் ஏமாற்றிக் கொண்டனர்.
ஆயின் , லட்சியத்தை
வரிந்துகொண்டு
போராட்ட வாழ்வை
விரும்பி ஏற்றபோது
வாழத் தெரியாதவனென
வசைபாடிய
அந்த நாலுபேரை
என்னென்பது ?
சுபொஅ.
3/1/2022.
0 comments :
Post a Comment