மறந்துவிட்டது
உணவு பரிமாறுகிறார்
எதிரே வைக்கப்பட்ட
காய்கறியின் பெயர்
மறந்துவிட்டது
தலையைச் சொறிகிறேன்.
நடைபயிற்சியில்
வணக்கம் சொல்கிறார்
தினசரி பார்ப்பவர்
பெயர் மறந்துவிட்டது
ஞாபகத்துக்கொண்டுவர
அல்லாடுகிறேன்
தினசரி பதிவு போடுகையில்
அநேகமாய் தேதியை
தப்பாகக் குறிக்கிறேன்
யாராவது சுட்டியபின்
திருத்துகிறேன்
மின் விளக்கை அணைக்க
மின் விசிறியை நிறத்த
தண்ணீர் குழாயைமூட
மறந்துபோகிறேன்
யாராவது சுட்டும்போது
இளிக்கிறேன்
என்றோ படித்தது
எல்லாம் நினைவில் இருக்கிறது
சின்ன சின்ன மறதிகள்
பாடாய்ப்படுத்துகிறது
எதற்கு இதனை எழுத
வந்தேன் ?
மறந்துவிட்டது
! ஞாபகம் வந்ததும் சொல்கிறேன்.
சுபொஅ.
0 comments :
Post a Comment