குறுமதியாளருக்கு….
பட்டாம் பூச்சிகளின்
வண்ணங்களை பட்டியல்
போட
சொற்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.
மலர்களின்
வாசனையை வகைப்
படுத்த
வழிதெரியாது தவிக்கிறேன்
கனிகளின்
சுவையை விவரிக்க
இனிப்பு என்கிற
ஒற்றைச் சொல் போதுமானதாக
இல்லை .
கானகத்தின் கனத்த
மவுனத்தை
கவின் சிரிப்பை
தாள இசையை
நகலெடுக்க கருவி
இல்லை !
அருவியின் பேரழகை
தாள லயத்தை நீர்ச்
சுழிப்பை
சொல்லில் அடக்க
முடிவதில்லை
ஒற்றையாய் அனைத்தையும்
குறுக்கும்
குறுமதியாளருக்கு
பன்மையின் வலிமை
எப்போதும் புரியப்
போவதில்லை !
சு.பொ.அகத்தியலிங்கம்.
23/1/2022.
0 comments :
Post a Comment