வள்ளுவனைப் படி !

Posted by அகத்தீ Labels:

 


வள்ளுவனைப் படி !

 

 


வள்ளுவனைப் படி ! திருவள்ளுவனைப் படி !

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றபடி !

 

ஏர் பின்னது உலகம் என்றவனைப் படி !

யார்வாய் கேட்பினும் மெய்ப்பொருள் காணென்றபடி !

 

நீர்இன்று அமையாது உலகு இயற்கையைப் படி!

அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை உணர்ந்து படி!

 

வாய்மை எனப்படுவது யாதென நீயும் படி

கற்றனைத்து ஊறும் அறிவு தொடர்ந்து படி!

 

குணம்நாடி குற்றமும்நாடி மிகைநாடி நீ படி !

அடுத்தது காட்டும் பளிங்கென நெஞ்சைப் படி !

 

இளைதாக முள்மரம் கொல்க என அறிந்து படி !

எண்ணியாங்கு எய்த திண்ணியராகப் படி!

 

அழுதகண்ணீரின் ஆற்றலை அறிந்து படி !

காலம் கருதி இடத்தாற் வினையாற்றப் படி !

 

சொல்லுக சொல்லைப் பயனுடைய படி !

நாவினால் சுட்டவடு ஆகாதபடி !

 

வினைத் திட்பம் என்பது மனத்திட்பம் என்றபடி

எண்ணித் துணிக கருமம் இழுக்கு அண்டாதபடி !

 

அன்பு அறிவு தேற்றம் அவாஇன்மை கொண்டபடி!

முகம்நக நட்பன்று அகம்நக நட்பைப் படி!

 

இனிய உளவாக இன்னாத கூறாதபடி!

ஊடலில் தோற்றவர் வென்றார் என்றபடி!

 

வள்ளுவனைப் படி ! திருவள்ளுவனைப் படி !

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றபடி !

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

 

15/1/2022.

 


0 comments :

Post a Comment