சங்கி விஞ்ஞான்
Posted by
சங்கி விஞ்ஞான்.***-**********-******
என் முப்பாட்டனுக்கு
முப்பாட்டனுக்கு
முப்பாட்டனுக்கு
முப்பாட்டனுக்கு
............................
.............................
முப்பாட்டனுக்கு
முப்பாட்டன்
கணினியில்
மகாபாரதம்
யாத்தான்
கார், ஹெலிகாப்டர்,
ரோபாட் எல்லாம்
அவனிடம் இருந்தன
அவன் முயற்சியில்
ஸ்டெம் செல் மூலம்
பிரசவித்ததே
எம் பரம்பரை!
ஆனாலும்
வர்ண அடுக்கும்
சாதிப் படிகட்டும்
சற்றும் குலையாமல்
காத்துவரும்
மநுவின் ஸ்வீகார
வம்சம் எங்களுடையது
இன்னுமா சந்தேகம்?
சு.பொ.அகத்தியலிங்கம்.
0 comments :
Post a Comment