#பதிந்த எம் சுவடு மட்டும்.

Posted by அகத்தீ Labels:




#பதிந்த எம் சுவடு மட்டும்.

எதுவும் கடந்து போகும்
இதுவும் கடந்து போகும்
வாழ்ந்ததின் மிச்சம் ஏது ?
பதிந்த எம் சுவடு மட்டும்.

வருடமோ கணக்கில் கூடும்
வலிகளும்  மரத்துப் போகும்
கனவுகள் என்ன வாகும் ?
காலந்தான் பதிலைக் கூறும் .

இளமையில்  மோதிப் பார்த்தும்
முதுமையில்  அலசிப் பார்த்தும்
மொத்தத்தில் கண்டது என்ன ?
லட்சியம் பிழையே இல்லை,

கூடி வாழ்ந்தது இன்பம்
கூடி உழைத்தது இன்பம்
உகுத்திடும் கண்ணீர் ஏனோ ?
போராட்டம் நாளும் இன்பம்.

எதுவும் கடந்து போகும்
இதுவும் கடந்து போகும்
வாழ்ந்ததின் மிச்சம் ஏது ?
பதிந்த எம் சுவடு மட்டும்.

சு.பொ.அகத்தியலிங்கம்.
15 ஜூன் 2019 . பிறந்த நாளில் …








0 comments :

Post a Comment