முதுமைப் பெருங்கனவு .
வலிக்காத நாட்கள்
சலிக்காத மனது
நோயில்லா உடம்பு
ஆரோக்கியமான இணையர்
முடையில்லா பணம்
தடையில்லா பாசம்
கொண்டாடும் பிள்ளைகள்
கொண்டாடப் பேரப்பிள்ளைகள்
பேசி மகிழ நண்பர்கள்
படித்து மகிழ புத்தகங்கள்
உளம் விரும்பும் பொதுத் தொண்டு
செவி நாடும் இன்சொற்கள்
இப்படியாய் நாளும் கழியும்
முதுமையே பெருங்கனவு!!
முடியுமோ சொல்லுங்கள் !
யதார்த்தம் உணருங்கள் !!!!!!
சு.பொ.அகத்தியலிங்கம்.
26 ஜூன் 2019 .காலை .10.02.
0 comments :
Post a Comment