#இதுவே தருணம்
ஒற்றையடிப் பாதையில்
காலில் செருப்புமின்றி
இருட்டை மிதித்து நடந்த நாட்களில்
அவர்களின் கனவு என்னவாக இருந்திருக்கும்?
காலில் செருப்புமின்றி
இருட்டை மிதித்து நடந்த நாட்களில்
அவர்களின் கனவு என்னவாக இருந்திருக்கும்?
செம்மண் சாலையில்
மாட்டு வண்டியினைப்
பின் தொடர்ந்து நடந்த நாட்களில்
அவர்களின் கனவு என்னவாக இருந்திருக்கும் ?
மாட்டு வண்டியினைப்
பின் தொடர்ந்து நடந்த நாட்களில்
அவர்களின் கனவு என்னவாக இருந்திருக்கும் ?
கிராமத்து தெருவில்
கார் ஒன்று நுழைந்த போது
ஊரே கூடி வேடிக்கை பார்த்த நாட்களில்
அவர்களின் கனவு என்னவாக இருந்திருக்கும் ?
கார் ஒன்று நுழைந்த போது
ஊரே கூடி வேடிக்கை பார்த்த நாட்களில்
அவர்களின் கனவு என்னவாக இருந்திருக்கும் ?
ஒரு வழிச் சாலை
இருவழிச் சாலை
நான்கு வழிச் சாலை
ஆறு வழிச் சாலை
மேம்பாலம்
அடுக்கு பாலம்
விரிந்து விரிந்து விரிந்து
நகர் வீங்கி வீங்கி வீங்கி
இப்போது
அவர்களின் கனவு என்னவாக இருக்கிறது
குடிநீர் …காற்று … பசுமை … தூய்மை ..
ஒற்றையடிப் பாதையிலேயே
நின்றிருக்க முடியுமா ?
ஒற்றையடிப் பாதைக்குத்
திரும்பிப் போக முடியுமா ?
இருவழிச் சாலை
நான்கு வழிச் சாலை
ஆறு வழிச் சாலை
மேம்பாலம்
அடுக்கு பாலம்
விரிந்து விரிந்து விரிந்து
நகர் வீங்கி வீங்கி வீங்கி
இப்போது
அவர்களின் கனவு என்னவாக இருக்கிறது
குடிநீர் …காற்று … பசுமை … தூய்மை ..
ஒற்றையடிப் பாதையிலேயே
நின்றிருக்க முடியுமா ?
ஒற்றையடிப் பாதைக்குத்
திரும்பிப் போக முடியுமா ?
அதுவும் சாத்தியமல்ல
இதுவும் சாத்தியமல்ல
எங்கே தவறு செய்தோம் ?
நுகர்வு எனும் பெரும்பசியில்
நாம் தின்றது எவை ? செரித்தது எவை ?
மீதம் இருப்பது எவை ? எவை ?
இன்னும் நம்பிக்கை இற்றுவிடவில்லை ?
யோசிக்கவும் செயல்படவும்
இதுவே தருணம்!!!
இதுவும் சாத்தியமல்ல
எங்கே தவறு செய்தோம் ?
நுகர்வு எனும் பெரும்பசியில்
நாம் தின்றது எவை ? செரித்தது எவை ?
மீதம் இருப்பது எவை ? எவை ?
இன்னும் நம்பிக்கை இற்றுவிடவில்லை ?
யோசிக்கவும் செயல்படவும்
இதுவே தருணம்!!!
சு.பொ.அகத்தியலிங்கம்.
21 ஜூன் 2019 .இரவு .8.02
21 ஜூன் 2019 .இரவு .8.02
0 comments :
Post a Comment