சித்தியளிக்கும் புத்தி யோகம் !
திருச்சி உறையூரை தலைநகராய்க்
கொண்டு ஆண்ட சோழன்
அங்கொரு கடற்கரையை
ஏன் சிருஷ்டிக்கவில்லை ?
மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்
பிட்டுக்கு மண் சுமந்த சிவனைபிரம்பால்
அடித்ததற்கு வழக்கு ஏதும் பதியவில்லையா ?
மனித உரிமை மீறல் இல்லையா ?
சாதி இரண்டொழிய என்று
சொன்ன அவ்வைப் பாட்டி!
ஒரு சாதி எம் சாதி ;இன்னொரு சாதி
எதுவென்று ஏன் சொல்லவில்லை ?
வள்ளுவர் எல்லாம் சொன்னார்
சரிதான் . இல்லை என சொல்லவில்லை .
ஆனால் கணினி யுகத்தைக் குறளில்
ஏன் வரைந்து காட்டவில்லை ?
மகாபாரதம் ,இராமயணம் என
அறிவியல் நூல்கள் இருக்க
இயற்பியல் ,வேதியியல் ,கணிதம் என
பள்ளிகளில் இன்னும் பாடம் நடத்தலாமோ ?
சோமபானம் சுராபானம் அருந்தித்
திழைக்காமல் வருந்தலாமோ ?மது போதை ,
மத சாதி இன போதை , தேசபக்தி போதை
ஞானச் செருக்கறுக்கும் .அடிமை சுகமளிக்கும்.
சு.பொ.அகத்தியலிங்கம்.
17 ஜூன் 2019 . பகல்.3.58.
0 comments :
Post a Comment