கோபம் பொங்கத்தானே வேண்டும் ?

Posted by அகத்தீ Labels:



நீ
மனித குலத்தை நேசிப்பது மெய்யெனில்
மனிதகுல விரோதியை யுத்தவெறியரை
கட்டாயம் வெறுக்கத்தானே வேண்டும் ?

நீ
உழைக்கும் வர்க்கத்தை  காதலிப்பது மெய்யெனில்
சுரண்டும் வர்க்கத்தை கொள்ளைலாப வெறியரை
சுட்டெரிக்கும் கோபம் பொங்கத்தானே  வேண்டும் ?

நீ
ஒடுக்கப்பட்டோரை உளமார விரும்புவது உண்மையெனில்
ஒடுக்குவோரை  ஆதிக்க மேட்டுக்குடியை
சினம் பொங்க சீறி எதிர்க்கத்தானே வேண்டும் ?

நீ
சமத்துவத்தை சமூகநீதியை நம்புவது மெய்யெனில்
மநு நீதியை ஆதிக்க அதிகாரத்தை
பொசுக்கும்  கோபம் பொங்கத்தானே வேண்டும் ?

சு.பொ.அகத்தியலிங்கம்.
8 ஜூன் 2019 .காலை .8.40






0 comments :

Post a Comment