#எம்குடிசைக்கு #நீதிவந்ததில்லை!

Posted by அகத்தீ Labels:






சேரரோ...
சோழரோ... 
பாண்டியரோ...
பல்லவரோ... 
நாயக்கரோ...
பாளையக்காரரோ
குப்தரோ... 
மெளரியரோ... 
குஷானரோ...
மொகலாயரோ... 
வெள்ளையரோ...
பின் அடுத்தடுத்து 

எமை
ஆளவந்த கொள்ளையரோ...
யாரண்ட போதும் 
எம் குடிசைக்கு 
நீதி வந்ததில்லை.

உழைப்பவரும் 
ஒடுக்கப்பட்டவரும்
உயர 
ஒரு துரும்பையும் 
அசைக்கவில்லை
‘பொற்கால ஆட்சி’ 
‘நற்கால ஆட்சி’
ஏழைக்கு 
இதுவரை இருந்ததில்லை .

‘வல்லரசு’ என்பது 
ஏழையின் கனவுமல்ல;
ஏழைக்கான அரசும் அல்ல.
உழைக்கும் மக்களுக்கும்,
ஒடுக்கப்பட்டோருக்கும் 
இழப்பதற்கு எதுவுமில்லை
அடிமைச் சங்கிலியைத் தவிர..!
பெறுவதற்கு 
ஓர் பொன்னுலகம்
வெகுதூரக் கனவாய்..! 

சு.பொ.அகத்தியலிங்கம்.
11 ஜூன் 2019.காலை .9.36.
Su Po Agathiyalingam முகநூலில்...

0 comments :

Post a Comment