#மெளனத்தைக் குலைத்த
#மெல்லிய புன்னகை எங்ஙனம் ?
இவ்வளவு களைகள்
மண்டிக் கிடக்கும்
வயலில்
எப்படி அங்கொன்று
இங்கொன்றாய்
நெற்கதிர்கள் ?
நீர் நிலைகள் வறண்டு
வெடித்துக் கிடக்கும்
பூமியில்
ஓரிரு இடத்தில் விரலில்
ஒட்டும்
நீர் திவலைகள் எப்படி
?
இருள் போர்த்திய இரவு
எதிரில் இருப்பதே
தெரியவில்லை
இருளைக் கிழிக்கும்
மின்மினிகள் அங்கெப்படி
?
அப்படி ஒரு அமைதி
மூச்சுவிடவும் தயக்கம்
மெளனத்தைக் குலைத்த
மெல்லிய புன்னகை எங்ஙனம் ?
அனைத்தையும் இழந்து
நிராயுதபாணியாய்
வல்லூறுகளில் நடுவே
– ஆயினும்
நம்பிக்கை துளிர்க்கிறது
!!!
சு.பொ.அகத்தியலிங்கம்.
12 ஜுன் 2019 .இரவு
. 7.55.
0 comments :
Post a Comment