புரட்சிப்
பெருநதி 48
இக்கட்டுரை 48 வது கட்டுரையாகக் கொள்க
இக்கட்டுரை 48 வது கட்டுரையாகக் கொள்க
கள்ளிப்பாலுக்குத்
தப்பிய சோவியத் சிசு
சு.பொ.அகத்தியலிங்கம் .
தேசிய இனங்களின் சிறைச்சாலை எனும் முந்தைய நிலை மாறி - தேசிய இனங்களுக்கு பிரிந்துபோகும் உரிமை வழங்கப்பட்டது ;பின்லந்து பிரிந்து போனது
“ பாட்டாளி
வர்க்கப் புரட்சி என்றால்
என்ன ?
பாட்டாளி
வர்க்க சர்வாதிகாரம் என்றால்
என்ன ?
இவற்றை
புரிந்து கொள்ள ;
நடந்த
முக்கியமான நிகழ்வுகளை உள்ளது
உள்ளபடி விவரிக்கிறது .”
“ ஆமாம்
, தவாரிஷ்
! [தோழனே]
உனக்கு
தேவையானவை எல்லாவற்றையும்
புரட்சி உனக்கு உரிய காலத்தில்
அளிக்கும்.ஆனால்
இன்று இரவல்ல .
இங்கிருந்து
அதாவது மாரிக்கால அரன்மனையிலிருந்து
ஏதேனும் வெளியே போனால் ,
நாம்
சமூகவிரோதிகள் ,கொள்ளைக்காரர்கள்
என்றே அழைக்கப்படுவோம் ;
உண்மையான
சோஷலிஸ்ட்டுகள் என்கிற பெயரை
எடுக்கமாட்டோம்.
நாம் புரட்சி
செய்ய வரவில்லை ;
கொள்ளையிடவே
வந்தோம் என பகைவர்கள் எள்ளி
நகையாடுவார்கள் .
ஆகவே ஒரு
துரும்பைக் கூட நாம் எடுத்துச்
செல்லக்கூடாது .
இனி இது
மக்களின் சொத்து ;
புரட்சியின்
கெளரவத்தை உயர்த்திப் பிடிக்க
இவற்றைப் பாதுகாப்போம்.”
என்றார்
காவலுக்கு நின்ற தொழிலாளி
; இது
1917
நவம்பர்
6 இரவு
நடந்தது .
புரட்சிகர
ஒழுக்கத்தை அங்கே நிலைநாட்டியது
தொழிலாளி வர்க்கம்.
நகரத்தில்
மட்டுமல்ல சைபீரிய சுரங்கங்களிலும்
புரட்சியின் வீச்சைக் காண
முடிந்தது .
கொடும்
குற்றங்கள் காரணமாக ச்செர்ம்
நகர் கடும் உழைப்புத் தண்டனை
முகாமிலிருந்த தொழிலாளர்களிடையே
புரட்சியின் உயிர்துடிப்பு
அப்படியே இருந்தது .
ஆ .
ரைம்ஸ்
வில்லியம்ஸ் சொல்லுகிறார்
, “ ஒரு
கை எங்கள் தோள்களைத் தொட்டது
.
திரும்பினோம்
. இரண்டு
முரட்டுச் சுரங்கத் தொழிலாளர்
முகங்களை எதிர்கொண்டோம் .
நாங்கள்
ச்செர்ம் நகரின் கமிஸார்கள்
என்றனர்.”
அங்கு
சுரங்கத் தொழிலாளர்களோடு
உரையாடிய ரைம்ஸ் அவர்கள்
கூறியவற்றை தொக்குக்கிறார்
;
“ நாங்கள்
விரும்புவது எங்களுடைய
விடுதலையை மட்டுமல்ல ;உலகம்
முழுவதுமுள்ள தொழிலாளர்
விடுதலையையும்கூட .
அவர்கள்
விடுதலை அடையாவிட்டால் ;
சுரங்கங்களுக்குச்
சொந்தக்காரர் ஆகவும் -
அவற்றை
நாங்களே நடத்தவும் உள்ள
சுதந்திரத்தை எங்களால்
நிலைநிறுத்தி வைத்துக் கொள்ள
முடியாது .
உலக
ஏகாதிபத்தியவாதிகளின் பேராசை
பிடித்த கைகள் கடல்களுக்கு
அப்பாலிருந்து ஏற்கெனவே
நம்மை நோக்கி நீட்டப்படுகிறது
. உலகத்
தொழிலாளர்களின் கரங்கள்தாம்
அந்தப் பிடிகளை நமது
குரல்வளையிலிருந்து அகற்ற
முடியும்.”
புரட்சி
நடந்து ஆறு மாதம் கூட நிறைவு
பெறவில்லை ;
ஆனால்
கடைக்கோடிவரை வேர்விட்டு
ஓங்கி எழுந்த சர்வதேச உணர்வு
புரட்சியின் கொடையன்றி வேறென்ன
?
சோவியத்
புரட்சியை உலகிலுள்ள பலர்
எழுதினர் .ஐந்து
அமெரிக்க பத்திரிகையாளர்கள்
நேரில் கண்டு செய்தி தந்தனர்
. ஆ
.ரைமஸ்
எழுதிய நேரில் கண்ட ரஷ்யப்
புரட்சி ,
ஜான் ரீடு
எழுதிய உலகைக் குலுக்கிய
பத்து நாட்கள் என இவ்விரண்டு
நூல்களும் முக்கியமானவை .இது
குறித்து லெனின் சொன்ன வரிகளையே
ஆரம்பத்தில் பார்த்தோம்.
இவற்றை
அவசியம் படியுங்கள் .
நாற்பது
கோடி ஏக்கருக்கும் மேற்பட்ட
நிலம் விவசாயிகள் கைக்கு
மாறின .
உரிமைகள்
வழங்கப்பட்டன .
அதே சமயம்
ரொட்டிக்கும் இறச்சிக்கும்
தற்காலிகத் தட்டுப்பாட்டை
தோற்றோடிய நிலப்பிரபுக்களும்
,
பிற்போக்காளர்களும்
உருவாக்கினர் .மக்கள்
கடும் சிரமத்துக்கு ஆளானார்கள்
.
தேசிய
இனங்களின் சிறைச்சாலை எனும்
முந்தைய நிலை மாறி -
தேசிய
இனங்களுக்கு பிரிந்துபோகும்
உரிமை வழங்கப்பட்டது ;பின்லந்து
பிரிந்து போனது யுத்தத்தை
தவிர்க்க ஜெர்மனியின் மோசமான
நிபந்தனைகளை ஏற்று சமரசம்
செய்யவேண்டிய நிலையிலும்
லெனின் சமாதானத்துக்காக
ஏற்றார் .
அதே சமயம்
லெனின் எச்சரித்தார் ;
“ ஏகாதிபத்திய
அரசுகள் மீண்டும் சோவியத்
குடியரசு மீது தாக்குதல்களைத்
தொடுக்கும் .
இது தவிர்க்க
முடியாது .ஆகவே
தொழிலாளிகள் விவசாயிகள்
கட்டுப்பாட்டைப் பலப்படுத்த
வேண்டும்.
சோஷலிச
நாட்டைத் தனலங் கருதாது
பாதுகாப்பதற்குப் பொதுமக்களைத்
தயார்படுத்த வேண்டும்.
செஞ்சேனையை
வலுவாக உருவாக்க வேண்டும்
.சகலருக்கும்
இராணுவப் பயிற்சி அளிக்க
வேண்டும் .”
என்றார்.
“ உணவுக்காக
நடத்தப்படும் போராட்டம்
சோஷலிசத்திற்காக நடத்தப்படும்
போராட்டமே .”
என்றார்
.
புரட்சியைக்
காப்பாற்ற தொழிலாளி வர்க்கத்தால்தான்
முடியும் என லெனின் நம்பினார்
.
எடுத்துச்
சொன்னார் .
அவர்கள்
எப்படி இருக்க வேண்டுமென
வரையறுத்தார் .
“ சோஷலிசத்திற்கு
விசுவாசமாக நடந்துகொள்கிற
ஆயிரக் கணக்கான தொழிலாளர்களே
நமக்குத் தேவை .
அவர்கள்
லஞ்சத்திற்குப் பல்லைக்காட்டிச்
சரண்டையாதவர்களாக இருக்க
வேண்டும் ;குலாக்குகள்
,கொள்ளைலாபக்காரர்கள்
,கொள்ளைக்காரர்கள்
,சீர்குலைப்பவர்கள்
முதலியவர்களை எதிர்த்து
இரும்பு போன்ற சக்தியைக்
காட்டும் ஆற்றல் மிக்கவராக
இருக்க வேண்டும் .”
என்றார்.
உலகைத்
திருப்பிப் பார்க்கவைத்த –
முற்றிலும் மாறுபட்ட புதிய
சகாப்தத்தை
வார்த்தெடுத்த சோவியத் புரட்சி
பலரின் கோபப்பார்வைக்கும்
இலக்காகியது .
மகுடம்
இழந்த மன்னர் ,
சொத்தை
இழந்த பெருமுதலாளிகள் ,நிலத்தை
இழந்த நிலப்பிரபுக்கள் ,
இவர்களோடு
இராணுவத் தளபதிகள் ,மென்ஷ்விக்குகள்
,
சீர்குலைவாளர்கள்
அனைவரும் ஆயுதம் தாங்கி
தெருவில் இறங்கினார்கள்
.பிரட்டன்
,பிரான்ஸ்
,அமெரிக்கா
போன்ற நாடுகள் உதவின .1918
கோடைமாதம்
18 நாடுகள்
முற்றுகையிட்டன.லெனின்
எச்சரித்தது நடந்தது .
“ இப்போது
நம் முன்னால் உள்ள கேள்வி
வெற்றியா ,சாவா
என்பதுதான் .இளம்
சோவியத் அரசைக் காக்க எந்தத்
தியாகத்தையும் செய்யத்
துணியுங்கள் .”
என லெனின்
விடுத்த அறைகூவல் மக்களைக்
கவ்விப் பிடித்தது .பேராற்றலோடு
எழுந்தனர் .
மக்களைத்
திரட்ட ஆலைவாயில் தோறும்
லெனின் சென்றார் .
அப்போதுதான்
அவர் சுடப்பட்டார் .
உயிர்
தப்பினார் ஆயினும் அவர்
மரணத்தை இது விரைவுபடுத்தியது
.
சோவியத்
யூனியன் மீது கைவைக்காதே என
உலகம் முழுவதும் தொழிலாளிவர்க்கம்
போராடியது .பிரட்டனில்
ஆயுதங்களைக் கப்பலில் ஏற்ற
மறுத்து தொழிலாளர் போராடினர்
.
எல்லாமும்
சேர்ந்து 1922
முற்றுகை
முறியடிக்கப்பட்டது .
இதற்கிடையில்
கூடிய கட்சி மாநாடு ரஷ்ய சமூக
ஜனநாயக தொழிலாளர் கட்சி என்பதை
ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி [
போல்ஷ்விக்]
என மாற்றிக்கொண்டது
.
ஜார்
மன்னரையும் அவர் குடும்பத்தையும்
யூரல் பகுதியில் எகடிரின்பர்க்
எனுமிடத்தில் சிறைவைத்திருந்தார்
லெனின் .
ஆனால்
பாதுகாப்பு ஆபத்து கருதி
யூரல் பகுதி தொழிலாளர் ,விவசாயி
செஞ்சேனைப் பிரிவு வேறு முடிவு
எடுத்தது .
விபரம்
வருமாறு :
“யூரலின்
சிவப்புத் தலைநகரான எகடரின்பர்க்கை
செக்கோஸ்லாவால் வெறிக்கும்பல்
மிரட்டி வருகிறது .
மகுடம்
தரித்த இக்கொலைகாரன் தலைமறவானால்
மக்கள்நீதிமன்றத்திற்கு
வராமல் ஒழிந்துவிடக்கூடும்
;இவற்றை
மனதிற்கொண்டு மக்கள் விருப்பத்தை
நிறைவேற்றுவதென்று நிர்வாகக்குழு
முடிவெடுத்தது .ஏராளமான
கொலைக் குற்றங்களைச் செய்த
முன்னாள் மன்னர் ஜார் நிக்கோலாய்
ரோமோனோவை சுட்டுத் தள்ளுவது
என்கிற முடிவு
1918
ஜூலை
16
இரவு
நிறைவேற்றப்பட்டது .ரோமோமோவ்
குடும்பம் பாதுகாப்பான வேரொரு
இடத்திற்கு மாற்றப்பட்டது.”
ஜாரைக்
கொன்றது .குடும்பத்தைப்
பழிவாங்கவில்லை .
மகத்தான
ரஷ்யப் புரட்சியின் தளநாயகர்
லெனின் 1924
ஜனவரி
21
ஆம் நாள்
மறைந்தார் .
சோவியத்
சிசுவை கள்ளிப்பாலில் சாகடிக்க
முயன்ற அனைத்து சதிகளையும்
முறியடித்து சோஷலிச சோவியத்தை
ஓர் முன்னுதாரணமாய் அவர்
படைத்து அழியாப் புகழ்
சூட்டிக்கொண்டார் .
புரட்சி
தொடரும் …
தேசிய
இனங்களின் சிறைச்சாலை எனும்
முந்தைய நிலை மாறி -
தேசிய
இனங்களுக்கு பிரிந்துபோகும்
உரிமை வழங்கப்பட்டது ;பின்லந்து
பிரிந்து போனது
0 comments :
Post a Comment