புரட்சிப் பெருநதி - 52
ஒடுக்குமுறைக்கு
இடமில்லா
புத்துலகம் காண.....
சு.பொ.அகத்தியலிங்கம்
“ நீங்கள் பூக்களை வெட்டி எறிந்து விடலாம் ஆனால் வசந்தத்தை ஒருபோதும் நிறுத்திவிட முடியாது”.”என்கிற நம்பிக்கையோடு போராட்ட அலைகள் மீண்டும் மீண்டும் எழும் .
“ என்னதான்
நடந்தாலும் தன்னைச் சூழந்திருக்கும்
இசை ஒரு போதும் நிற்பதில்லை
என வாழ்வெனும் மரம் அறிந்தே
இருக்கிறது .
உயிர்
எவ்வளவு பலியாயினும் ;
இரத்தம்
எவ்வளவு கொட்டப்படுவதாயினும்
; காற்று
அவர்களுக்கு உயிரூட்டிக்கொண்டிருக்கும்
வரை ;
நிலம்
அவர்களை பண்படுத்தி நேசிக்கும்
வரை;
அந்த
இசை ஆணையும் பெண்ணையும் ஆடச்
செய்துகொண்டே இருக்கும் .”
இருபதாம்
நூற்றாண்டும் இருபத்தோராம்
நூற்றாண்டின் தொடக்கமும்
மாபெரும் நிகழ்வுகளின்
தொடர்ச்சியால் மானுட சரித்திரத்தை
மாற்றி எழுதிக்கொண்டிருக்கின்றன
;
cஒன்றிரண்டை
பார்ப்போமா ?
“ எங்களைச்
சுற்றிலும் பயங்கரமான பனிமூட்டம்
.காற்று
சுழன்றடித்தது .மலைமேல்
நாங்கள் பாதித்தூரம் சென்றவுடன்
மழை பெய்யத் தொடங்கியது .
நாங்கள்
உயரேசெல்லச் செல்ல புயற்
காற்றோடு பயங்கரமான ஆலங்கட்டி
மழையில் சிக்கிக்கொண்டோம்
.காற்றழுத்தம்
குறைந்து கொண்டே வந்ததால்
எங்களால் மூச்சுவிடக்கூட
முடியவில்லை .பேசுவது
முற்றிலும் சாத்தியமற்றதாக
இருந்தது ;
எங்கள்
மூச்சுக்காற்றும்கூட உறைந்து
போகிற அளவுக்கு குளிர் அதிகமாக
இருந்தால்,
எங்கள்
கைகளும் உதடுகளும் நீலம்பாரித்துப்
போயின .ஓய்வெடுப்பதற்காகவோ
மலம் கழிப்பதற்காகவோ கீழே
உட்கார்ந்தவர்கள் அப்படியே
உறைந்துபோய் அப்படியே இறந்து
போனார்கள் .
…. நள்ளிரவில்
நாங்கள் மற்றொரு சிகரத்தின்
மீது ஏறத்தொடங்கினோம் .
தொடர்ந்து
மழை ,பனி
,சூறைக்காற்று
நூற்றுக்கணக்கான எங்கள்
தோழர்கள் அங்கேயே இறந்து
போனார்கள் .
அந்தப்
பாதை நெடுக எங்கள் தோழர்களை
எழுந்து நிற்கச் செய்வதற்காக
நாங்கள் குனிந்த வண்ணம்
இருந்தோம் .
ஆனால்
அவர்கள் ஏற்கெனவே இறந்து
போய்விட்டார்கள் என்பது
அப்போதுதான் எங்களுக்குத்
தெரிந்தது .”
நெடும்பயணம்
என வரலாற்றில் சிகப்பு
எழுத்துகளால் பொறிக்கப்பட்ட
நிகழ்வில் பங்கேற்ற சீனக்
கம்யூனிஸ்ட் கட்சியின் ஹூபேய்
மாகாணத்தனைவர் டுங் பிவூ
எழுதிய குறிப்புதான் மேலே
உள்ளவை.
இப்படி
நிரந்தரமாகப்
பனி மூடியிருந்த 5
மலைத்
தொடர்கள் உள்ளிட்ட 18
மலைத்
தொடர்களையும்,
24 ஆறுகளையும்,
62 மாநகரங்கள்
மற்றும் நகரங்களையும்,
ஆயிரக்கணக்கான
கிராமங்களையும் அவர்கள்
கடந்து சென்றனர்.1934
அக்டோபர்
16
தொடங்கினர்
;
1935
அக்டோபர்
21
வரை
ஓராண்டுக்கு மேலாக நெடும்பயணம்
மேற்கொண்டனர் .
சீனத்தில்
மக்கள் ஜனநாயகப் புரட்சியை
இலக்காக்கிய இப்பயணம் மாசேதுங்
தலைமையில் சீனக் கம்யூனிஸ்ட்
கட்சியால் மேற்கொள்ளப்பட்டது
.
தெற்கே
ஜியாங்க்ஸியிலிருந்து
மூன்று படைப் பிரிவுகளாக
2,30,000
செஞ்சேனை
வீரர்களுடன் தொடங்கிய இந்த
நெடும்பயணம் மேற்கு வழியாக
வடக்கே ஷென்ஸியை அடைந்தது
.துயரம்
நிரம்பிய ஒன்றாக இருந்தது.
படைவீரர்களில்
மூன்றில் இரண்டு பங்கு பேர்
இந்த பயணத்தின்போதே உயிரிழந்தனர்.
பயண
தூரம் 9000
கி.மீ
.
சீனப்பெருஞ்சுவரைப்
போல் நெடும்பயணமும் சீனாவின்
பேராற்றலின் சாட்சியானது
.1911
ல்
தொடங்கியது சீனப் புரட்சி
;
இந்த
நெடும் பயணம் உள்ளிட்ட
காட்டாறுகளைக் கடந்து
1949
அக்டோபர்
முதல் தேதி சீன வானில் சிவப்பு
நட்சத்திரமாய் எழுந்தது.
வியட்நாம்
வரலாற்றில் இன்னொரு காவியம்
எனில் மிகை அல்ல .
ஹோசிமின்
தலைமையில்1945
செப்டம்பர்
2
ல்
வடக்கு வியட்நாம் விடுதலையானது
.ஆனால்
தெற்கிலுள்ள சொந்த சகோதரர்களுடன்
இணைய1976
வரை
நடத்திய நெடும் போராட்டம்
சொல்லில் அடங்காது.
அங்குலம்
அங்குலாமாய் விஷகுண்டால்
அமெரிக்க ஏகாதிபத்தியம்
துளைத்தபோதும்;
வெறுங்காலுடன்
வியட்நாமிய விவசாயி சாதாரண
துப்பாக்கியுடன் நின்று
போராடி அமெரிக்கவை பின்னங்கால்
பிடரியில் இடிபட ஓட்டமெடுக்கவைத்ததை
உலகம் கண்டது .
“உன்
பெயரும் என் பெயரும் வியட்நாம்
வியட்நாம்.”
என
உலகெங்கும் உரக்க ஒலித்தது.
ஒருமைப்பாடு
கீதம் .
அமெரிக்க
ஏகாதிபத்தியம் அம்மணமாய்
உலக அரங்கில் நின்றது இன்னும்
பல நூற்றாண்டாயினும் இக்காட்சி
வரலாற்றில் நிலைக்கும் .
.
1976 ஜூலையில்
இரு வியட்நாமும் இணைந்தது
.
“ சுதந்திரத்தின்
விலை அதிகம் .அது
இல்லாமல் வாழ்வதற்கு நாம்
உடன்பட வேண்டும் அல்லது அதிக
விலை கொடுத்து வாங்க வேண்டும்
என்றார் ஹொஸே மார்த்தி .
மேலும்
சொன்னார் ,”
ஏகாதிபத்தியங்கள்
லத்தின் அமெரிக்க நாடுகளைச்
சூறையாடியும் ;
அங்குள்ள
பழங்குடியினரை கொன்றுகுவித்தும்
;
அடிமையாக்கியும்
; அவர்கள்
இரத்தத்திலும் வியர்வையிலும்
செல்வம் குவித்தது .
இந்த
ஏகாதிபத்தியத்தை முறியடிக்காமல்
கியூபா சுதந்திரக்காற்றை
சுவாசிக்க முடியாது”””.”
புரட்சியாளர்
ஹொஸே மார்த்தி மற்றும் சைமன்
பொலிவார் அடிச்சுவட்டில்
காஸ்ட்ரோ,
சே
குவேரா பயணம் தொடர்ந்தனர்
.
அமெரிக்காவின்
மூக்கின் அருகிலுள்ள ஒரு
குட்டித் தீவான கியூபா 1959
ஜனவரி
1
அன்று
சர்வாதிகாரி
பாடிஸ்டா.
ஆட்சிக்கு
இறுதி மரண அடி கொடுத்தது.
ஆனால்
அதற்கு 2340
நாட்கள்
முன்னரே 1953
ஜூலை
26
அன்றே
புரட்சி தொடங்கிவிட்டது
.அன்றுதான்
பிடல் காஸ்ட்ரோ மற்றும் சே
குவேரா தலைமையில் மன்கடா
ராணுவ நிலையத்தை புயலாகத்
தாக்கினார்கள் .
கியூபா
இன்னும் அமெரிக்காவின்
அடிவயிற்றைக் கலக்கிக் கொண்டே
இருக்கிறது .
வெட்டுண்ட
ரத்த நாளங்களாய்த் துடிக்கும்
லத்தின் அமெரிக்க சோகம்;
ஏகாதிபத்தியத்தின்
இரக்கமற்ற கொடூரச் சுரண்டலின்
அடக்குமுறையின் ஜீவனுள்ள
சாட்சியாகும்
லத்தின்
அமெரிக்காவை ஆக்கிரமித்துச்
சூறையாடுவதில் வாளும்
சிலுவையும் இணைந்தே செயல்பட்டன
என்பார் எடுவர்டோ காலியானோ
.
இக்கட்டுரையின்
முதல் பத்தியும் அவரது வரிகளே
!
லத்தின்
அமெரிக்ககவிஞர் எர்னெஸ்ட்டோ
கார்டெனல் மார்ட்டினென்
கவிதைகள் துயர வரலாற்றின்
உயிர்முடிச்சை சொல்லும் .
{வலையில்
கண்டெடுதத்படி
}
என் முனகல்களைக் கேளும்என் ஆட்சேபத்தைக் கேளும்ஏனெனில் நீர் சர்வாதிகாரிகளுடன் சினேகமான கடவுளோஅவர்களது அரசியலை ஆதரிப்பவரோஅவர்களது பிரசாராத்தாற் பாதிக்கப்பட்டவரோ அல்ல,நீர் சண்டியர்களுடன் இணங்குபவரும் அல்லபத்திரிகை அறிக்கைகளிலோ நேர்மை இல்லையுத்த உற்பத்தியைப் பெருக்கிக் கொண்டேதம் உரைகளிற் சமாதானம் பற்றிப் பேசுகின்றனர்சமாதான மாநாடுகளிற் பேசிக்கொண்டேஇரகசியமாகப் போருக்கு ஆயத்தமாகின்றனர்இரவிரவாக அவர்களது பொய் சொல்லும் வானொலி இரையும்அவர்களது மேசைகள் மீது பாதகத் திட்டங்களும்கொடிய நடவடிக்கைகளும் அடுக்கப்பட்டுள்ளனஆயினும் நீர் என்னை அவர்களின் திட்டங்களினின்று காப்பீர்அவர்கள் துப்பாக்கி வாய்களாற் பேசுவர்அவர்களது ஒளிரும் நாக்குகள் துப்பாக்கிச் சனியன்கள்அவர்களது அரசியலை முறியடியும்அவர்களது அறிக்கைகளைக் குழப்பும்அவர்களது வேலைத்திட்டத்தை கவிழும்எச்சரிக்கைச் சங்கின் வேளையில் நீர் என்னுடனிருப்பீர்குண்டு விழும் நாளில் நீர் என் புகலிடமாயிருப்பீர்அவர்களது பொய்யான விளம்பரங்களையும்அரசியற் பிரச்சாரத்தையும் நம்பாதவர்களை ஆசீர்வதிப்பீர்கவச வாகனங்கள் போன்றுஉம் அன்பினாற் சூழுவீர். “
“5வது
தோத்திரம்” எனத் தலைப்பிட்ட
கவிதை
“ஓ
!
தேவனே
என் சொற்களைக் கேளும்
அவர்களது
பேச்சுக்களிலோ
ஓ
தேவனே அவர்களை அழியும்
ஆம்
லத்தின் அமெரிக்கா நம்பிக்கை
தளராமல் மீண்டும் மீண்டும்
போராடி எழுந்து கொண்டே
இருக்கிறது .
ஒரு
கையில் பைபிளும் மறுகையில்
துப்பாக்கியுமாய் போராடுவதும்
சில இடங்களில் நிகழ்கிறது
.
செனகல்
நாட்டுக் கவிஞன் லியோபோல்டு
சிடார் செங்கோர் கவிதையில்
சீறுவான் ,
“நமது
கருத்த இரத்தத்தின்
பாடலை
உற்றுக்கேள்
இழந்துபோன
கிராமங்களின்
இடையிலுள்ள
ஆப்பிரிக்காவின்
கருத்த
உயிர்
துடிப்பை
உற்றுக் கேள்”
இன
ஒடுக்கலுக்கெதிரான கறுப்பர்களின்
குரல் நெல்சன் மாண்டேலா
உருவில் சிலிர்த்தெழுந்தது
;
27
ஆண்டுகாலம்
கடுஞ்சிறைக் கொட்டடியில்
அடைக்கப்பட்டும் அக்குரலை
அடக்க முடியவில்லை .இருப்புச்
சிறையை உடைத்து வெளிப்பட்டது
அக்கறுப்புச் சூரியன் .
ஆப்பிரிக்க
நாடுகள் ஒன்றன் பின் ஒன்றாய்
தங்களின் விடுதலையை எழுத
முனைந்தது ;
ஆதே
சமயம் ஏகாதிபத்தியம் பின்னிய
சதிவலையில் சொந்த சகோதரச்
சண்டையிலும் இனக்குழு மோதலிலும்
இரத்தம் இன்னும் கசிந்து
கொண்டே இருக்கிறது ;
ஏகாதிபத்திய
ஓநாய்கள் நக்கிச் சுவைத்துக்
கொண்டிருக்கின்றன .
உலகின்
ஏதேனும் ஒரு மூலையில் துப்பாக்கிச்
சத்தம் கேட்டவண்ணமே உள்ளது
.
35 ஆண்டுகளுக்கு
முந்தைய கணக்குப்படியே அதுவரை
மனிதகுலம் பதினாலாயிரம்
சிறிய ,பெரிய
யுத்தங்களை கண்டுவிட்டது
,
நானூறு
கோடி மக்களை இழந்துவிட்டது
.
இன்னும்
யுத்தப் பிசாசின் பேய்ப்பசி
அடங்கவில்லை .
அமெரிக்கா
உள்ளிட்ட நாடுகளின் யுத்தவியாபாரம்
சூடுகுறையாமல் தொடர்கிறது
.
சோவியத்
தகர்வை -
லெனின்
சிலை வீழ்த்தப்பட்டதை ;
பெர்லின்
சுவர் இடிக்கப்பட்டதை
ஏகாதிபத்திய ஊடகங்கள் திருவிழாக்
கொண்டாட்டமாய் திரும்பத்திரும்பக்
காட்டிக் கூத்தாடின .
கம்யூனிசம்
புதைக்கப்பட்டுவிட்டதாய்
முதலாளித்துவம் சாகாவரம்
பெற்றுவிட்டதாய் தத்துவ
பூசாரிகள் உடுக்கை அடித்தனர்
.ஆனால்
அவர்களின் கொண்டாட்டம் அற்ப
ஆயுளில் முடிந்தது .மீள
முடியாத பொருளாதார நெருக்கடி
முதலாளித்துவத்தின் உண்மையான
குரூர முகத்தைக் காட்டிவிட்டது
.
2011
தொடங்கியது
போராட்ட அலை .உலகின்
பல நாடுகளில் பலவடிவம் எடுத்தது
.
வறுமை
,வேலையின்மை
,கடன்
சுமை ,
ஒடுக்குமுறை
,போதை
,
பருவகால
மாற்றங்கள் ,சுற்றுச்
சூழல் சீரழிவு .என
படையெடுக்கும் பிரச்சனைகளால்
உலகம் மூச்சுத் திணறுகிறது
.
இதன்
ஒரு வெடிப்பாய் வால்ஸ்ட்ரீட்
எனப்படும் அமெரிக்க பங்குச்
சந்தை கொள்ளையர் தெருவைக்
கைப்பற்றும் போராட்டம்
புதுவீச்சானது .
“ நீங்கள்
ஒரு சதம் ;
நாங்கள்
99
சதம்.”
என்கிற
முழக்கம் பொருள்செறிவுடன்
ஓங்கி ஒலித்தது .ஒரு
சதம் கார்ப்பரேட் முதலாளிகள்
கொள்ளைக்காக 99
சதம்
மக்கள் தண்டிக்கப்பட வேண்டுமா
எனும் கேள்வி உலகெங்கும்
விவாதத்துக்குள்ளாயின .
போராட்டம்
தற்காலிகமாக அடக்கப்பட்டிருக்கலாம்
ஆனால் எழுப்பிய கேள்வியோ
அடங்கவில்லை .
அடங்கவும்
செய்யாது .
“ நீங்கள்
பூக்களை வெட்டி எறிந்து
விடலாம் ஆனால் வசந்தத்தை
ஒருபோதும் நிறுத்திவிட
முடியாது”.”என்கிற
நம்பிக்கையோடு போராட்ட அலைகள்
மீண்டும் மீண்டும் எழும் .
முதலாளித்துவத்தின்
நோய் முற்றிக்கொண்டே இருக்கிறது
; அது
தன் லாபவெறியில் இயற்கையை
,மானுடத்தை
கண்மூடித்தனமாகச் சூறையாட
பைத்தியம் பிடித்தநிலையில்
அலைகிறது .இதிலிருந்து
தப்பிக்கும் மருந்து மார்க்ஸ்
என்கிற சமூகவிஞ்ஞான மருத்துவனிடமே
இருக்கிறது .
ஆகவேதான்
மீண்டும் மீண்டும் உலகமவனை
கல்லறையிலிருந்து எழுப்பி
கேட்டுக்கொண்டிருக்கிறது
. 99
சதத்தின்
வெற்றியும் 1
சதத்தின்
வீழ்ச்சியும் வரலாற்றில்
தவிர்க்க முடியாதது .
தாமதமாகலாம்
. ஆனால்
தடுக்கவே இயலாது .
வரலாறு
நிற்காது ஓடிக்கொண்டே இருக்கும்
.
கிராஷியின்
சிந்தனைகளை சுட்டி தோழர்கள்
இ எம் எஸ்சும் கோவிந்தப்பிள்ளையும்
எழுதுகின்றனர் ,
“நெப்போலியனின்
தோல்வியைத் தொடர்ந்து ஐரோப்பியா
முழுக்க எதிர்புரட்சிச்
சூறாவளி ,அதை
எதிர்கொண்டு 1830
களிலும்
வெவ்வேறு ஐரோப்பிய நாடுகளிலும்
நடைபெற்ற புரட்சிகள் .
அவற்றைத்
தொடர்ந்து 1871ல்
பாரிசில் நடைபெற்ற தொழிலாளி
வர்க்கப் புரட்சி ,
அதன்
கூடுதல் வடிவமாக 1917
ரஷ்யப்
புரட்சி ,அதைத்
தொடர்ந்து பல்வேறு நாடுகளில்
வீசிய புரட்சிச் சூறாவளியும்
நாலைய்ந்து ஆண்டுகளில் அதற்கு
ஏற்பட்ட்த் தோல்வியும் ;
உள்ளிட்ட
இவைகளைத்தான் [இத்தாலிய
கம்யூனிஸ்ட் சிந்தனையாளர்
முசோலினி சிறையில் வாடிய]
அண்டோனியா
கிராம்ஷி ஆராய்ந்தார்.
இவை
ஒவ்வொன்றும் உலகளாவிய
புரட்சியின் பிரிக்க முடியாத
பகுதிகளாகும் என்பது கிராம்ஷியின்
மதிப்பீடு .புரட்சி
-
எதிர்புரட்சி
-மீண்டும்
ஒரு புரட்சி -
முன்னேற்றம்
என்ற நிகழ்ச்சிப்போக்கில்
வரலாறு முன்னேறுவதாக கிராம்ஷி
சுட்டிக்காட்டுகிறார்.”
மனித
சமூகம் எந்த அளவு அதிக அளவுக்குச்
சுரண்டப்படுகிறதோ -
எந்த
அளவு அசமத்துவமும் ,வேலையிமையும்
பஞ்சமும் பட்டினியும் வாட்டி
வதைக்கிறதோ -
எந்த
அளவு இயற்கை சூறையாடப்படுகிறதோ
, பசுமை
பலியிடப்படுகிறதோ -
சுற்றுச்
சூழல் நாசமாக்கப்படுகிறதோ-
எந்த
அளவு ஒடுக்குமுறை தாண்டவமாடுகிறதோ
- மனித
உரிமை மீறப்பட்டுகிறதோ அதன்
எதிர்வினையாய் எழும் ஒவ்வொரு
போராட்டத்திலும் மார்க்ஸும்
எங்கெல்சும் லெனினும்
புன்னகைக்கின்றனர் .
சே
குவேரா கண்சிமிட்டுகிறார்
. அவர்
சொல்லுவாரே …
“ வாழ்வுக்கும்
மரணத்துக்கும் எதிரான
போராட்டத்தில் எல்லைகளே
கிடையாது .
உலகின்
ஒரு மூலையில் நடப்பது குறித்து
கவலைப்படாமல் இருக்க முடியாது
.
ஏகாதிபத்தியத்திற்கு
எதிரான ஒரு தேசத்தில் ஏதாவது
ஒரு பகுதியில் கிடைத்த
சிறுவெற்றியானாலும் அது நம்
அனைவரின் வெற்றியே .
அது
போல் ஏகாதிபத்தியத்திற்கெதிரான
போரில் யாருடைய தோல்வியாயினும்
நம் அனைவரின் தோல்வியே ...”
மாசேதுங்
எப்போதோ சொன்ன வார்த்தைகள்
இப்போதும் தேவைப்படுகிறது
…
“நமது
பழைய மனப்பாண்மைகளை எல்லாம்
இன்று நாம் மாற்றிக்கொள்ள
வேண்டும் .
கேள்வி
கேட்க முடியாதவற்றையும்
கேள்வி கேட்க வேண்டும் .
சிந்திக்க
முடியாதவற்றையும் செய்யத்
துணிய வேண்டும் .மத
ஒடுக்குமுறை ,கல்வி
சார்ந்த ஒடுக்குமுறை ,
அரசியல்
ரீதியான ஒடுக்குமுறை ,
சமூக
ஒடுக்குமுறை ,இலக்கிய
ஒடுக்குமுறை ,
பொருளாதார
ஒடுக்குமுறை ,பண்பாட்டு
ஒடுக்குமுறை ,
அறிவுத்துறை
சார்ந்த ஒடுக்குமுறை ,சர்வதேச
ஒடுக்குமுறை ஆகிய எந்த
ஒடுக்குமுறைக்கும் இனி உலகில்
இடமில்லை [
மக்கள்
] ஜனநாயகம்
எனும் மாபெரும் முழக்கத்தின்
கீழ் இவை அனைத்தும் செய்யப்பட
வேண்டும் “.”
என்று
அறைகூவி எழுவோம் .
புதியதோர்
உலகம் செய்வோம்
புரட்சி
தொடரும் ..
புரட்சி
தொடர்கிறது
புரட்சி
தொடர்ந்துகொண்டேயிருக்கும்
[
இத்தொடர்
இத்துடன் முடிகிறது.
எல்லாவற்றையும்
சொல்லிவிடவில்லை .
புரட்சிப்
பெருந்தியின் போக்கில் அங்கும்
இங்குமாய் சில வாய் மொண்டு
குடித்திருகிறோம் .
ஆயினும்
வரலாற்றின் போக்கை சுட்டிய
நிறைவோடு இத்தொடரை இப்போதைக்கு
நிறைவு செய்கிறோம்]
நன்றி ; தீக்கதிர் ,30/10/2017. வெளியான கட்டுரையின் சுருக்கப்படாத வடிவம்
0 comments :
Post a Comment