வசுதைவ குடும்பம் (உலகமே ஒரு குடும்பம்)
“அயம் நிஜ: பரோ வேதி கணனா லகுசேதஸாம்
உதாரசரிதானாம் து வசுதைவ குடும்பகம் ”
இந்த ஸ்லோகம் மஹோபநிஷத் (மஹா உபநிடதம்) 6:71-இல் இடம்பெற்றுள்ளது.
பொருள் :
“இவர் எனக்கு வேண்டியவர்; அவர் எனக்கு வேண்டாதவர்” என்று வேறுபாடுகள் காண்பவர் சிறுமதியுடையவர். இவை மிகவும் கீழ்த்தரமான புத்தியின் வெளிபாடாகும். குறுகிய எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் கடந்த சான்றோர், “இவ்வுலகமே ஒரு குடும்பம்” என்ற உண்மையை உணர்வர்.
[மேலே உள்ளவை ஓர் ஆன்மீக இந்துத்துவ வலைப்
பக்கத்திலிருந்து காப்பி அண்ட் பேஸ்ட் ]
“வசுவைத குடும்பம்” அதாவது ”உலகமே
ஓர் குடும்பம்” என்று விஸ்வகுரு மோடி ஜி20 மாநாட்டை யொட்டி முழங்குகிறார் .
இதில் நமக்கென்ன ஆட்சேபனை ? எதுவும் இல்லை .
வசுவைத குடும்பம் எனில்
கருப்பனும் இருக்கலாம், சிவப்பனும் இருக்கலாம்,
வெள்ளையனும் இருக்கலாம், மாநிறத்தவனும் இருக்கலாம்,
சரிதானே ! விஸ்வகுரு !
வசுவைத குடும்பம் எனில்
மாட்டுக்கறி சாப்பிடுகிறவனும் இருக்கலாம்,
பன்றிக்கறி சாப்பிடுகிறவனும் இருக்கலாம்,
தயிர்சாதம் சாப்பிடுகிறவனும் இருக்கலாம் ,
அப்படித்தானே விஸ்வகுரு !
வசுவைத குடும்பம் எனில்
இந்து ,முஸ்லீம் .கிறுத்துவன் ,பார்சி
உலகிலுள்ள எல்லா மதங்களும்
சரிநிகர் சமானம் .
வெறுப்பைக் கக்கக்கூடாது .
இணைந்து வாழ வேண்டும்
இல்லையா விஸ்வகுரு !
வசுவைத குடும்பம் எனில்
கடவுளை நம்புகிறவனும் இருக்கலாம்,
கடவுள் கற்பனை என்போனும் இருக்கலாம்,
நியாயந்தானே விஸ்வகுரு !
வசுவைத குடும்பம் எனில்
அறிவைச் சுடரச் செய்ய வேண்டும்
எல்லோருக்கும்தானே விஸ்வகுரு !
வசுவைத குடும்பம் எனில்
விஸ்வகர்மா யோஜனா என
குலத்தொழில் திணிக்கலாமா
சொல் விஸ்வகுரு !
வசுவைத குடும்பம் எனில்
நிலமும் தொழிலும்
செல்வமும் செழிப்பும்
இன்பமும் ஆரோக்கியமும்
எல்லோருக்கும் பொதுதானே
விளக்கு விஸ்வகுரு
வசுவைத குடும்பம் எனில்
அம்பானிக்கு இருக்கிற உரிமை
அந்தோணிக்கும் அப்துல்லாவுக்கும்
அம்மாவாசைக்கும் மஹிஷாசனுக்கும்
உண்டுதானே !விஸ்வகுரு !
வசுவைத குடும்பம் எனில்
இஸ்லாமியர் வீடுகளை இடிக்க
புல்டோசரை அனுப்பலாமா ?
வாய் திற விஸ்வகுரு !
வசுவைத குடும்பம் எனில்
மணிப்பூர் பழங்குடி பெண்களையும்
ஹரியான நுஹ் பகுதி சிறுபான்மையோரையும்
அன்பால் அரவணைக்க என்ன தடை ?
சொல்லுங்க விஸ்வகுரு !
வசுவைத குடும்பம் எனில்
உச்சபதவியில் இருந்தாலும்
தலித்துகளையும் பழகுடியினரையும்
விதவைப் பெண்களையும்
வர்னாஸ்ரமப்படி மநுதர்மப் படி
மங்கள காரியங்களிலும்
சுபகாரியங்களிலும்
தள்ளிவைக்கலாமா விஸ்வகுரு !
ஆங்காங்கே தூவுகிற
ஜிகினா வார்த்தைகளாலோ
சர்க்கரை பேச்சுகளாலோ
மநு அநீதியை மறைக்க முடியுமா ?
சனாதன விஸ்வகுரு !
நீங்கள் அடிக்கிற தமுக்கில்
அபஸ்வரமே ஒலிக்கிறது விஸ்வகுரு !
சுபொஅ.
9/9/2023.
0 comments :
Post a Comment