மனதும் புண்படாது
இல்லையா ?
உலகம் தட்டையானதுதான்
சூரியன்தான்
பூமியைச் சுற்றுகிறது
சந்திரன்
ஒரு கிரகம்தான்
ராகு கேது
பாம்புகள் விழுங்குவதே கிரஹணங்கள்
நெற்றியிலும்
தோளிலும் தொடையிலும் பாதத்திலுல் குழந்தை பிறக்கும்
பன்றி வயிற்றில்
அடிமை பிறப்பான்
உடன் கட்டை
ஏறுவது உத்தமம்
குழந்தைத்
திருமணம் உயர்ந்தது
பெண்கள் படிக்கக்
கூடாது ; வேலைக்கு போகக்கூடாது
தாழ்ந்தப்பட்ட
மக்கள் கோபுரதரிசனம் செய்தால் போதும் கோயிலுக்குள் போகக்கூடாது
அவரவர் குலத்தொழில்
செய்தால் போதும்
சனாதனம் வாழ்க
! பகுதறிவு ஒழிக ! இதுவே நம் பண்பாடு !
இப்படி எழுதினால்
யார் மனதும் புண்படாது இல்லையா ?
அறிவையும்
மனச்சாட்சியையும் கொன்றால் போதும்….
சுபொஅ.
[ யார் மனதையும்
புண்படுத்தாமல் எழுத பயிற்சி எடுக்கிறேன்]
0 comments :
Post a Comment