ஆனாலும் யாராலும் இதை....
திருமண நிகழ்வோ
பிறந்த நாள்
கொண்டாட்டமோ
வேறு ஏதேனும்
சந்தோஷக் கூடுகையோ !
எங்கும் ஒரே
பரபரப்பு
ஒரே மினுமினுப்பு
ஒரே ஜிலுஜிலு
ஜொலிப்பு
எல்லோர் முகத்திலும்
அச்சடித்த
புன்னகை
கட்டிப்பிடித்தல்
கைகுலுக்கல்
வணக்கம் சொல்லல்
குசல விசாரிப்புகள்
உடன் இருப்போரை
அறிமுகம்
செய்தல்
அலைபேசி எண்
பரிமாறல்
செல்பி
எல்லாம் சரி
!
விதிவிலக்குகளைத் தவிர
அந்த அலைபேசியில்
மீண்டும்
எப்போதேனும்
அழைத்தது
உண்டா ?
செல்பி புகைப்படங்கள்
சேமிக்கப்பட்டதுண்டா
?
அங்கே
ஜொலித்தது
அழகல்ல பகட்டு
காட்சிப்
படுத்தியது போலிப் பெருமை
பரிமாறியது
பாசமல்ல சடங்கு
வட்டியில்லாக்
கடனாய் மொய் பரிசு
ஆனாலும் யாராலும்
இதை
தவிர்க்க
முடிவதில்லையே !
விதிவிலக்குகளைத் தவிர
நடிப்பு எங்கும்
எல்லோருக்கும்
இயல்பாகி
விட்டதோ !
சுபொஅ.
22/09/24.
[ விதிவிலக்குகளைப்
பற்றி பேசவில்லை ]
0 comments :
Post a Comment