ரயில் மார்க்கமாக
சாலை மார்க்கமா
பயணப்பட்டுக்கொண்டே
இருக்கிறோம்.
வழிநெடுக
எங்கும்
ஒரு புறம்
இடித்துக்கொண்டே
இருக்கிறார்கள்
இன்னொரு புறம்
கட்டுமானம்
நடந்துக்கொண்டே இருக்கிறது.
நேற்று இருந்ததுபோல்
எதுவும் இன்று
இல்லை
நகரமோ கிராமமோ
முகம் மாறிக்கொண்டே
இருக்கிறது.
எல்லாம்
வளர்ச்சி
என்கிறார்கள்
ஆனால் ஏனோ
மூச்சுத்
திணறுகிறது.
சாதியம் தொலையாத
வளர்ச்சி
வறுமை தொலையாத
வளர்ச்சி
உச்சத்தை
நோக்கி ஒரு சிறு கூட்டம்
படு பள்ளத்தை
நோக்கி பெருங் கூட்டம்
மலைக்கும்
மடுவுக்கும் இடையில்
அல்லல் படும்
மானுடம்
வளர்ச்சியின்
இலக்கணம்
பாமரனுக்கும்
புரியவே இல்லை.
பண்டிதன்
ஏமாற்றுகிறான்
புள்ளிவிவரங்களால்…..
வழிநெடுக
எங்கும்
ஒரு புறம்
இடித்துக்கொண்டே
இருக்கிறார்கள்
இன்னொரு புறம்
கட்டுமானம்
நடந்துக்கொண்டே இருக்கிறது.
சுபொஅ.
16/09/24.
0 comments :
Post a Comment