வயதாக வயதாகத்தான்
தெரிகிறது
நாம் அறிந்தது
கொஞ்சம் !
சரி தவறு
என்பதும்
முதிர்ச்சியோடு
சம்மந்தப்பட்டது
தனி நபர்
முதிர்ச்சி மட்டுமல்ல
சமூக முதிர்ச்சியும்
பண்பாட்டு
முதிர்ச்சியும்தான்
ஞானத் தேடலில்
ஆயுள் கழியும்
நம் அனுபவத்
தடத்தில் அடுத்த
தலைமுறை பாடம்
கற்கும்
யுகந்தோறும்
இதுதானே நடக்கும் !
சுபொஅ.
0 comments :
Post a Comment