தமிழில் சொற்களே இல்லை

Posted by அகத்தீ Labels:

 



நாடகத்தில் கோமாளிகள் உண்டு

சர்க்கஸில் கோமாளிகள் உண்டு

சிரிக்க வைத்திருக்கிறார்கள்

செய்தி சொல்லியிருக்கிறார்கள்

எப்போதும் நம் நெஞ்சுக்கு நெருக்கமானவர்கள் !

 

அரசியல் களத்தில் சிலபேர்

ஆன்மீக தளத்தில் சிலபேர்

உளறிக்கொட்டுகிறார்கள்

பித்தம் தலைக்கேறி ஆடுகிறார்கள் - தவறியும்

அவர்களைக் கோமாளி என்று சொல்லி விடாதீர்கள் !

கோமாளிகள் ஒருபோதும்

வன்மம் குரோதம் விதைப்பதில்லை!

தமிழில் அவர்களுக்கு சொற்களே இல்லை

‘சங்கீஸ்’ என்று அழைக்கலாம் ! சரிதானே !

 

சுபொஅ.

04/10/24.

 


0 comments :

Post a Comment