உங்கள் நாவின்
சுவை மொட்டுக்கள்
உங்கள் காதின்
ரசனை மடல்கள்
உங்கள் கண்ணின்
நடன ஈர்ப்புகள்
உங்கள் தேடலின்
குவிமையம்
எதுவுமே நேற்று
போல் இன்று இல்லை
உங்கள் தாத்தாவுக்கும்
உங்களுக்கும்
இருப்பது
தலைமுறை இடைவெளி அல்ல
காலத்தின்
வளர் சிதை மாற்றம் - இது
முற்றுப்புள்ளி
அல்ல கால்புள்ளி ….
சுபொஅ.
0 comments :
Post a Comment