தாடிக்கும்
எனக்கும்
என்னதான்
பிணக்கு ?
மீசை அரும்பிய
வயதிலேயே
தாடியின்
மீது காதலும் அரும்பியது !
வாலிப வயதில்
தாடி ஆசையில்
ஆட்டுத்தாடி
[ ஃபிரெஞ்ச் தாடி ]யோடு அலைந்தேன்.
நூல் வாசிக்க
வாசிக்க தாடிக்காரர்கள்
மீது காதல்
பொங்கியது
பெரியார்
,தாகூர் , மார்க்ஸ் இப்படி
தாடிகள் மிகவும்
ஈர்த்தன.
எவ்வளவு உரம்
போட்டும் எனக்கு
தாடி முளைக்கவே
மறுக்குது
வாலிபத்தில்
கருந்தாடியும் இல்லை
வயோதிகத்தில்
வெண் தாடியும் இல்லை.
ஆசையில் பாதி
பெரிய
வெண் மீசையில்
நிறைவேறியதோ !
நிறைவேறா
தாடிக்காதலை
கவிதையிலாவது
சொல்லிவைப்போம் !
சுபொஅ.
18/10/24.
0 comments :
Post a Comment