வெறுப்பின் சுனாமி!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Posted by அகத்தீ Labels:

 வெறுப்பின் சுனாமி!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

கிரிகெட்டில் வெறுப்பைத் தூவினர்
சாப்பாட்டில் வெறுப்பைக் கலந்தனர்
உடையில் வெறுப்பைச் சேர்த்தனர்
பெயரில் வெறுப்பை உமிழ்ந்தனர்
படிப்பில் வெறுப்பை விதைத்தனர்
பாடங்களில் வெறுப்பை விரவினர்
வரலாற்றில் வெறுப்பை திணித்தனர்
தொல்லியல் ஆய்விலும் வெறுப்பைத் தேடினர்
விஞ்ஞானத்தில் வெறுப்பை பொதிந்தனர்
தொற்றுநோயிலும் வெறுப்பைப் பரப்பினர்
அரசியலில் வெறுப்பை வியூகமாக்கினர்
காதலில் வெறுப்பை கக்கினர்
வழிபாட்டில் வெறுப்பை ஆயுதமாக்கினர்
ஊடகங்களில் வெறுப்பை நிறைத்தனர்
செய்திகளை வதந்திகளை வெறுப்பால் செய்தனர்
நீதியை நிர்வாகத்தை வெறுப்பின் கருவிகளாக்கினர்
அன்றாட வாழ்வில் வெறுப்பை சர்வசாதாரணமாக்கினர்
வெறுப்பின் சுனாமி சுழன்றடிக்கிறது
தேசத்தையும் சுழற்றி அடிக்கிறது
விதைத்ததைத்தானே அறுக்க முடியும் !!!
சு.பொ.அகத்தியலிங்கம்.
8/6/2022.

0 comments :

Post a Comment