அழிவு சமீபத்திருக்கிறது என
ஆளுக்கு ஆள் போட்டி போட்டு எச்சரிக்கிறார்கள்…
புவி வெப்பமாகிறது பெருவெள்ளம் வறட்சி
பேரழிவு என அபாயச் சங்கு ஊதுகிறார்கள் …
மனிதன் தன் பிடியை ’ஏஐ’யிட இழந்து வருகிறான்
பேரழிவை விலைகொடுத்து வாங்குவதாய் எச்சரிக்கை ஒலி !
அழிவு சமீபத்திருக்கிறது என
ஆளுக்கு ஆள் போட்டி போட்டு எச்சரிக்கிறார்கள்…
காற்றை ,நீரை ,சுற்றுச் சூழலை சூறையாடுகிறான் தொற்று நோய்
மனித குலத்தை தின்று செரிக்க வாய் பிளக்கிறது பயம் காட்டுகிறது..
எதில் தப்பிப் பிழைத்தாலும் யுத்தப் பேரரக்கன்
உலகை மயணாபூமி ஆக்கத் துடித்துக் கொண்டிருக்கிறான்..
அழிவு சமீபத்திருக்கிறது என
ஆளுக்கு ஆள் போட்டி போட்டு எச்சரிக்கிறார்கள்…
ஆனாலும் இன்னும் மீதமிருக்கிறது நம்பிக்கை
சீர் செய்ய நேரம் இருக்கிறது … தூக்கம் கலை !!!
சுபொஅ.

0 comments :
Post a Comment