கவித்துவமும் வலியும் மிக்க ‘பயணம்’.............

Posted by அகத்தீ Labels:

 








[ 1 ]

 

கவித்துவமும் வலியும் மிக்க ‘பயணம்’.............

 

ஒரு நெடுங்கதை உள்ளிட்டு ஐந்து கதைகளின் தொகுப்பைபயணம்எனும் பெயரில் நம் கையில் தவழ விட்டிருக்கிற அப்துல் நஜ்முதீன் எனும் அரோ கவிப்பிரியன் .ஐந்து கதையும் பெண் மையச் சிந்தனையின் தெறிப்புகள் எனில் மிகை அல்ல .

இதில் பயணம் எனும் நெடுங்கதை ஓர் நடை பெற்ற சம்பவதின் எதிரொலி ; செத்தவரை உயிரோடு உலவவிட்டு வேலை தேடி இடம் பெயரும் மக்களின் வாழ்க்கை வலியை கவித்துமும் வலியும் கொப்பளிக்கும் நெடுங்கவிதை நடையில் எழுதி உள்ளார் . “ அவன் நம்ம ஊர்க்காரன்தானே” , “அதுதான் எனக்குப் பயம்இந்த வரிகளில் கதையின் உயிர் முடிச்சு அவிழ்கிறது . கடைசி வரி நெஞ்சைப் பிசைகிறதுஎல்லா கதைகளுக்கும் / இங்கே முடிவு கிடையாது / சில கதைகள் / உயிரோடு வெளியேறுவதிதான் / வெற்றி.”

 

பச்சையம்மாள் கிழவியும் ஒத்த ஆடும் அடித்தட்டு பெண்களிடம் பொங்கி வழியும் பேரன்பும் அக்கறைக்கும் உயிர் சாட்சி .” உயிரைப் பிரித்துக் கொடுக்கிறதுதான் / உண்மையான தியாகம்வரிகள் மட்டுமல்ல கதையும் பளிச் .

 

உறக்கத்தை இருட்டை மிகவும் பிடித்துப் போகும் அளவுக்கு அவர் வாழ்க்கைப்பாடு . பெண்ணிய நோக்கில்உறக்கம்உரக்கப் பேசும் .

 

“ ‘பாட்டி ஜன்னல் வழியே உலகத்தைப் பார்த்தாள்.அம்மா தையல் இயந்திரத்தின் வழியே உலகத்தைப் தைத்தாள் .நான் எனது லென்ஸ் மற்றும் பேனா வழியே உலகிற்கு உரக்கச் சொல்கிறேன்.’பொன்னூலாடைஎன்பது சங்கிலி .அது ஒரு விடுதலைப் பாலம்என்கிறாள் சுலைகா . முஸ்லீம் சமுதாயம் ஒரு மூடுண்ட சமூகமாய்  வாழ நிர்பந்திக்கும் சமூகச் சூழலில் மெல்ல பரிணமிக்கும் விடுதலை உணர்வை அழகாய் இயல்பாய் கவித்துவமாய்ச் சித்தரித்திருக்கிற அப்துல் நஜ்முதினுக்கு என் பாராட்டுகள் !

 

அரசியல் / மேடையில்  தொடங்கல /உயிரைக் காக்கும் / ஒரு சிறிய முடிவில்தான் / தொடங்கியது ….” மல்லிகாவிடம் , “ ஒரு தொழிலாளி / வர்க்க அரசியலைக் கற்றுக்கொள்ளும் போதுதான் / மனிதம் உயிர்த்தெழும்பும்என்பதை வலுவாய்ச் சொல்லுகிறதுநூல்’.

 

கவித்துவ மொழிநடை எழுத்தாளருக்கு நன்கு கை கொடுக்கிறது .தெளிவான பாலின ,வர்க்க ,சமூகபார்வை வலு சேர்க்கிறது . தொடர்ந்து நுட்பமாகக்  கதை எழுதினால் சிகரத்தைத் தொடலாம் . வாழ்த்துகள் !

 

பயணம் , அரோ கவிப்பிரியன் , விலை : ரூ.120 / ,பக்கங்கள் : 96

தொடர்புக்கு : 91 90803 29144

 

 

 சுபொஅ.

 [ 2 ]

கல்வியின் முக்கியத்துவத்தைச் சொல்லும் சிறுகதைகள் ....

அடைப்புக் குறிக்குள் சொல்லப்பட்ட வரியே இந்நூலின் அறிமுகமாகிவிட்டது. ஒன்பது கதைகள் இட்டுக்கட்டிச் சொல்லப்பட்ட்துதான் ஆயின் குட்டிச் சொல்ல வேண்டிய செய்தியைக் குட்டிக்கதையாய் கடத்திவிடுவது சிறப்பு .

கனவைக் காத்த மனிதர்என்பது நூலின் தலைப்பு மட்டுமல்ல சிவப்புச் சட்டை தாத்தா ,ஸ்ரீ ராமுலு தாத்தா , பீடி ஆயா ,புத்தக மாமா என ஒவ்வொருவரும் அடை காக்கும் கல்வியின் கனவே இந்நூலின் ஆதார சுருதி . ஏனைய கதைகளும் அதையொட்டியே .

இந்த கேரட்டர்களை வாழ்க்கையிலிருந்து எடுத்து தன் கற்பனையில் சிறுவர்களுக்கு சொல்லத்தக்க வித்ததில் வடித்திருக்கிறார் .

 

சிவப்புச் சட்டை தாத்தா என அவர் யாரைச் சொல்கிறார் என்பதை நானறியவில்லை . அவர் வாழும் பகுதியில் மீஞ்சூரில் தோழர் மாணிக்கம் என்பவரை நானறிவேன் . அவர் இறந்த போது பொதுசுடுக்காட்டில் எரிக்க்க்கூடாது என மேல்சாதியினர் எதிர்த்தனர் . அதை மீறி அவரை அங்கு கொண்டு சென்று எரித்தோம் . மேல் சாதிக்காரர்கள் கடையடைப்பு நடத்தி கண்டனம் தெரிவித்தனர் . ஆனால் ஊரும் சேரியும் ஒன்றாய்த் திரண்டு அவருக்கு இறுதி வழியனுப்பு நிகழ்வை மீஞ்சூர் கடைவீதி நெடுக நடத்தியது மறக்க முடியாதது .

 

கல்வியை வலியுறுத்த சிவப்புச் சட்டை தாத்தா , ஸ்ரீ ராமுலு தாத்தா , பீடி ஆயா மூவரும் கறாராக இருந்தனர் .கடுகடுப்பைக் காட்டி விரட்டினர் .அது அன்றைய காலத் தேவை .அன்பைக் கொட்டும் புத்தக மாமா அடுத்த தலைமுறையின் பரிணாமம் .

 

பிரச்சாரக் கதைகள் கண்டிப்பாய் தேவை . நானும் சில எழுதினேன் ஒரு பதிப்பகம் வாங்கியது . வடிவமைத்துக் காட்டியது ; ஆனால் வெளி வராமல் போனது . ஒரு வேளை வேறு யாரேனும் பின்னர் வெளியிடலாம் . அமுதன் தேவேந்திரனின் முயற்சி பாராட்டத் தக்கது . தொடர்க இன்னும் கூர்மையாய் இன்னும் நுட்பமாய் இன்னும் வலுவாய் இன்னும் எளிதாய்…. வாழ்த்துகள் !!!

கனவைக் காத்த மனிதர் ,[ கல்வியின் முக்கியத்துவத்தைச் சொல்லும் சிறுகதைகள் ], அமுத தேவேந்திரன் , விலை : ரூ.60 / , பக்கங்கள் :ரூ. 56 /அறிவியல் வெளியீடு ,94880 54683 / 97919 05003

 

 சுபொஅ.

 

 


0 comments :

Post a Comment