கடவுளும் அரசியலும்

Posted by அகத்தீ Labels:

 





கடவுளும் அரசியலும்

 

 “எங்கே தொட்டாலும்

முட்டுமிடம் அரசியலாக இருக்கிறதே!

இறைவா ! இது என்ன சோதனை ?...”

 

“ போடா ! முட்டாள்

நானும் சிக்கித் தவிக்குமிடம் அதுதான்

விடுதலை எந்நாள் ?”

 

“ இறைவா ! எங்களுக்குதான் கதியில்லை

அகப்பட்டுத் தவிக்கிறோம்

உனக்குமா புத்தியில்லை ?”

 

“ புத்தியிருந்தால்

கற்பனையில் எனைப் படைத்த

உங்களை நான் படைத்திருப்பேனா ?”

 

“ இறைவா ! புத்தி தெளிய

உன்னை வணங்குவார்- நீயே

எம் புத்தியை பேதலிக்கச் செய்யலாமா ?”

 

“ நீ புத்தியைத் தொலைத்ததற்கு

நான் எப்படி பொறுப்பாவேன் ! – என்னை

அரசியலில் சிக்க வைத்ததும் நீதானப்பா !”

 

“ இறைவா ! நீ எதற்கும் பொறுப்பில்லையா ?

ஏன் இப்படி நழுவுகிறாய் – உன்

பக்தனிடம்கூடவா திருவிளையாடல் ?”

 

“ போடா ! முட்டாள் ! நானென்ன

ஏ பி நாகராஜனா தனுஸா திருவிளையாடல்

சினிமா எடுக்க ! கொஞ்சமாவது யோசி !”

 

“ இறைவா ! உன்னை நம்பியதற்கு

என்னை செருப்பாலடிக்கணும் – நீ

பிடித்தால் சாமி வழிச்சா சாணி ….”

 

“ லேட்டாக வந்தாலும்  புத்தி வந்திருக்கு

அதிலும் அரசியல் பண்ணும் உன்னை

ஒரு போதும் திருத்தவே முடியாது போடா ! போ …”

 

“ இப்படி எல்லாம் நீ பேசுவதால்தான்

அப்பனே ! உன்னை ஆற்றில் குளத்தில்

தூக்கி எறிகிறோம் … எங்க அரசியலே தனி…”

 

[ இவனுகளிடம் மாட்டிச் சாகிறதா, இல்லை நாமே தற்கொலை செய்து கொள்கிறதா என இறைவன் குழம்பி நின்றான்….]

 

சுபொஅ.

0 comments :

Post a Comment