சிவ!
சிவா! …குட்டிக் கதை
அவரிடம் எதைப்
பேசுவது ?
அரசியல் வேண்டாம்
என்கிறார்
இலக்கியம்
தெரியாது என்கிறார்
சினிமா என்றதும்
காதை பொத்துகிறார்
பழைய நினைவுகளைக்
கிளறாதே என்கிறார்
அவரிடம் எதைப்
பேசுவது ?
குடும்பத்தை
பற்றி பேசவே மறுக்கிறார்
நட்புகளை
நினைவுகூர மறுக்கிறார்
நகைச்சுவையும்
பிடிக்கவில்லை
இசைக்கு காது
ஒத்துழைக்கவில்லை
அவரிடம் எதைப்
பேசுவது ?
சதா சத் விஷயங்களையே பேசு என்கிறார்
சிவ நாமம்
ஜெபித்தபடி இருக்கிறார்
தேவராம் திருவாசகம்
வாசிக்கச் சொல்கிறார்
காது கேட்காவிட்டாலும்
மன நிம்மதி என்கிறார்
ஒரு நாள்
அதிகாலை “சிவபதவி” அடைந்தார்
சிவசிவ நாமம்
முழங்க தேவாரம் திருவாசகம் ஓதி
பேரன் பேத்தி
சூழ வழி அனுப்பி வைத்தனர்- மறுநாள்
அவர் அலைபேசி
, டிரங்பெட்டியை சோதித்த பேரன்
கத்தினான்
“ தாத்தா டிரிபிள் ஏ
“. சிவ ! சிவா !
சுபொஅ.
21/4/2022.
[ இது என்
நண்பர் ஒருவர் வீட்டின் சம்பவம் . நேற்று திடீரென
போண் செய்தார் . பழைய நினைவுகளை மீட்டெடுத்தேன் .இங்கே பதிவாச்சு…]
0 comments :
Post a Comment