கற்றுக் கொள்ளாத
நாள்
ஏதாவது இருக்கிறதா
?
புத்தகத்திலிருந்து
வாழ்க்கையிலிருந்து
இயற்கையிலிருந்து
கற்றுக் கொள்ளாத
நாள்
ஏதாவது இருக்கிறதா
?
கற்றுக் கரை
சேர்வதென்பது
வெறும் கனவே
கற்றுக்கொண்டே
கடலில் நீந்துவதே
வாழ்க்கை
கற்றுத்தரும்
பெரும் அனுபவ
பாடம்
அன்பு பாசம்
காதல்
உறவு நட்பு
தோழமை
ஒவ்வொன்றும்
தேவையே
ஒவ்வொன்றும்
தரும்
சுகமோ வலியோ
ஒவ்வொருவிதமானவை
ஒவ்வொருவருக்குமானவை
.
கற்றுக் கொள்ளாத
நாள்
ஏதாவது இருக்கிறதா
?
புத்தகத்திலிருந்து
வாழ்க்கையிலிருந்து
இயற்கையிலிருந்து
கற்றுக் கொள்ளாத
நாள்
ஏதாவது இருக்கிறதா
?
சுபொஅ.
7/4/2023.
0 comments :
Post a Comment