தேர்வு நம் கையில்.

Posted by அகத்தீ Labels:

 

தேர்வு நம் கையில்.


ஆரம்பத்திலிருந்து

அவர்கள் சொன்னது

ஒன்றுகூட உண்மையில்லை

அவர்கள் செய்தது

ஒன்றுகூட நியாயமில்லை

 

ஆளூகொரு அளவுகோல்

எப்போதும் அவர்கள் கைவசம்

ஆளுக்கொரு நியாயம்

எப்போதும் அவர்களின் அகராதி

 

சீனாவிலிருந்து வந்தது என்றார்கள்

ஜப்ளிக ஜமாத் தந்தது என்றார்கள்

அசைவ உணவால் பெருகும் என்றார்கள்

சைவ உணவே சர்வரோகநிவாரணி என்றார்கள்

வாய்க்கு வந்ததை போதனை செய்தனர்

 

மூட பக்தனைவிட இழிவாய்

வாக்களித்த குடிமகனை

கைத்தட்டச் சொன்னார்கள்

விளக்குபிடிக்கச் சொன்னார்கள்

கோமியம் குடிக்கச் சொன்னார்கள்

காய்த்திரி மந்திரம் ஜெபிக்க சொன்னார்கள்

 

வீட்டுக்குள் அடைந்து கிடக்கச் சொன்னார்கள்

சொந்த ஊருக்கு நடக்கச் சொன்னார்கள்

வயிறு என ஒன்றிருப்பதை மறக்கச் சொன்னார்கள்

 

ஆனால் ஒன்று மட்டும் புரியவே இல்லை

அம்பானி அதானி பணப்பெட்டிகள்

கொரானா கொடுங்காலத்திலும்

அன்றாடம் குட்டிப்போட்டு பெருத்தன

ஊதிப் பெருத்த பிரதமர் நிவாரண நிதி

இருட்டில் பேய் தின்ற பிணமானது

 

ஆளுக்கொரு பேச்சு

ஊருக்கு ஒரு நியாயம்

என்பது வெறும் வார்த்தையல்ல

ஹரித்துவார் முதல்

கடைகோடி கிராமம் வரை

மோதிஷாவின் ராஜ்ய நீதியானது

 

ஆனாலும்

அவர் மிகவும் நல்லவர்

நமக்கு இரண்டு வாய்ப்பளிக்கிறார்

ஒன்று ,

கொரானாவில் சாக விருப்பமா ?

இரண்டு

கொடும் வறுமையில் சாக விருப்பமா ?

தேர்வு நம் கையில்.

 

இது ஜனநாயக நாடு !!

 

 

சுபொஅ.

 


1 comments :

  1. Avargal Unmaigal

    நாட்டு நடப்பை உரிச்சு சொன்ன அருமையான கவிதை பாராட்டுக்கள்

Post a Comment