ஆப்பிளிலிருந்து சமூகவிதியை கண்டார்

Posted by அகத்தீ Labels:
புரட்சிப் பெருநதி – 23


ஆப்பிளிலிருந்து சமூகவிதியை கண்டார்

சு.பொ.அகத்தியலிங்கம்.ஒரு சமுதாயம் பெற்றுள்ள சுதந்திரத்தின் அளவை
அச்சமூகத்தில் பெண்களுக்கு கூடுதலாகவோ,
குறைவாகவோ வழங்கப்பட்டுள்ள
சுதந்திரத்தைக் கொண்டுதான் அளக்க வேண்டும்
என்று முதலில் சொன்ன பெருமை
ஃபோரியரையே சாரும்.ஆப்பிள் விழுவதைக் கொண்டு புவியீர்ப்பு விசையை நியூட்டன் கண்டார் என்பது வழக்கிலுள்ள பேச்சு; “நானும் நியூட்டனைப் போல் ஆப்பிளால் சமூகவிதியைக் கண்டேன்என்பார் சார்லஸ் ஃபோரியர்.

1772 இல் பிரான்ஸில் பெசண்ட்கானில் ஒரு வியாபாரக் குடும்பத்தில் பிறந்தார் . “பொய் சொல்லக்கூடாதுஎன்கிற மதபோதனையால் கவரப்பட்டார் ; வியாபாரமோ பொய்மை மிக்கதாய் இருப்பதால் அதை வெறுத்தார் .கிறுத்துவக் கல்லூரியில் பயின்றார் ;பொறியியல் கல்லூரியில் சேர ஆசைப்பட்டு ;இடம் கிடைக்காமல் வேலைக்குச் சென்றார் .பாரீசுக்கு அடுத்த வியாபார நகரான லியோன்ஸில் தன் விருப்பத்துக்கு மாறாய் வியாபாரத்தில் ஈடுபடவேண்டியதாயிற்று .

பிரெஞ்சு புரட்சி காலகட்டத்தில் ஜாக்கோபின்களுக்கு எதிராக நடந்த எதிர்புரட்சி சக்திகளோடு 1793 இல் ஃபோரியர் இணைந்து போரிட்டார் ; கைது செய்யப்பட்டார் ;ஆயினும் தண்டனையிலிருந்து தப்பினார் ; ராணுவத்தில் சேர்ந்து சிறப்பாகப் பணியாற்றினார் ;1796 இல் உடல் நலம் கருதி ராணுவத்திலிருந்து விடுவிக்கப்பட்டார் . வேறு வழியின்றி மீண்டும் வியாபாரத்தில் ஈடுபட்டார் .வியாபாரப் பிரதிநிதியாகவும் வேறுபல பணியிலுமாய் இயன்றவரை 30 வயது வரை உலகைச் சுற்றி அனுபவத்தை பெற்றார்.

விலையை ஏற்ற பதுக்கிவைத்த ஆயிரம் டன் அரிசியைக் கடலில் தூக்கி எறிய உத்தரவிட்ட வியாபாரியை மார்ஸெயில்சிலும் ; மண்டியில் விற்பதைவிட பல மடங்கு விலையில் ஆப்பிள் விற்கப்படுவதை பாரீஸ் விடுதியிலும் கண்டார் ; மனம் நொந்தார் ; முதலாளித்துவம் பணத்துக்காக எதையும் ஈவு இரக்கமின்றி செய்யும் என்கிற உண்மையை அறிந்தார் .

மனித சமூகம் கடந்து செல்ல வேண்டிய நான்கு கட்டங்கள் குறித்து பேசிய - 56 வரிகள் கொண்டஉலகளாவிய ஒத்திசைவுஸஎல் ஹார்மோனி யூனிவர்ஸல்] கட்டுரையை 1803 இல் எழுதினார் . இதனை விரிவாக்கி 1808 இல்நான்கு இயக்கங்களின் சித்தாந்தமும் பொதுவான லட்சியங்களும்ஸதியரி டெஸ் குவாட்ரி மூவ்மெண்ட்ஸ் எட் டெஸ் டெஸ்ட்னிஸ் ஜென்ரல்] என்ற நூலாக வெளியிட்டார்.


இந்நூல் வியாபாரம், திருமணம், கட்டற்ற காதல், கல்வி போன்றவற்றிலுள்ள முதலாளித்துவ லாபவெறியை அம்பலப்படுத்தியது.“பாலன்க்ஸ்ஸயீhயடயnஒநள.] என்றழைக்கப்பட்ட ஒருகூட்டு வாழ்வு முறையைஅல்லது ஒரு அமைப்பை பற்றி கனவை விதைத்தார் .எழுதினார் பேசினார் . பொது இடத்தில் 1500 அல்லது 1600 பேர்குறிப்பாக விவசாயிகள் கூடிவாழ்ந்துவேலைகளில் உளப்பூர்வமாக ஈடுபட்டுஉற்பத்தியை பெருக்கிவயிறார உண்டுஉடுத்து - மாளிகை போன்ற இடத்தில் வசித்து -தேவைகளை நிறைவு செய்து கொண்டுலாபத்தைப் பங்கிட்டுக்கொண்டுபால், இன பேதம் ஒடுக்குமுறையற்றுஇன்பம் துய்த்து வாழ வழி சொன்னார் ; அதற்கென திட்டம் தயாரித்தார் .

இதில் உறுப்பினராயிருக்கும் தனிநபர்கள் தங்களுக்காகவும், சமுதாயத்திற்காகவும் தங்கள் திறமையை ,உழைப்பை சிக்கனமாக , கட்டுக்கோப்புடன் பயன்படுத்தி எல்லோரும் உற்சாகம் பெறலாம்என்றார் .இதற்கு நிதி உதவி செய்ய பெரும் செல்வந்தர்களை வேண்டினார்; தம் சொந்த சேமிப்பை இதில் கொட்டினார்; இவரும் இவரது சீடர்களும் 1832 இல் சோதனை முயற்சியாக பிரான்ஸில் ஒருபாலன்க்ஸ்அமைக்க முயற்சித்தனர். உறுப்பினர்களை சேர்த்தனர்; சந்தா சேகரித்தனர்; சோதனை முயற்சி வெற்றி பெறவில்லை.

தன் மாணவர்களின் உதவியோடுலா ரிபார்ம் இண்டஸ்ட்டிரியல்எனும் ஏட்டைத் துவக்கினார் . ஒருவருடமே அதுவும் தாக்குப் பிடித்தது .முயற்சிகள் தோல்வி அடைந்த போதிலும் ; இறுதிவரை தன் கனவுகளுக்கு வடிவம் கொடுப்பதிலும் முதலாளித்துவத்தை எதிர்ப்பதிலும் உறுதியாய் இருந்தார் .திருமணமே செய்து கொள்ளாமல் தன் வாழ்வை சமூக நலனுக்கு அர்ப்பணித்துக் கொண்ட ஃபோரியர் 1837 அக்டோபரில் இறந்தார் .

ஃபோரியர் மறைவுக்கு பின் இவரது பிரதான சீடரான விக்டர் கான்ஸிடெரண்ட் முயற்சியால் அமெரிக்காவில் 1848 இல் டெக்சாஸ் ,ஜெர்ஸி உட்பட சில இடங்களில் ஃபோரியர் பண்ணைகள் உருவாக்கப்பட்டன . குறுகிய காலமே நீடித்தது எனினும் பெரும் நம்பிக்கையை விதைத்தது .இவரது மறைவுக்குப் பின்னால் இவரது எழுத்துக்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டுஉலகு தழுவிய ஒற்றுமையின் சித்தாந்தம்ஸதியரி டி யூனிடி யுனிவர்ஸ்] என்கிற ஒரே நூலாக வெளிவந்தது.முதலாளித்துவ அமைப்பைதலைகீழ் உலகம்என வர்ணித்த ஃபோரியர் முதலாளித்துவத்தின் அராஜகம் ,ஒழுங்கின்மை ,போர் முதலிய பல கேடுகளைச் சுட்டிக்காட்டினார்.

ஒரு சமுதாயம் பெற்றுள்ள சுதந்திரத்தின் அளவை ; அச்சமூகத்தில் பெண்களுக்கு கூடுதலாகவோ ,குறைவாகவோ வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்தைக் கொண்டுதான் அளக்க வேண்டும்என்று முதலில் சொன்ன பெருமை ஃபோரியரையே சாரும்.“சமுதாயத்தின் வரலாறு பற்றிய கருத்தமைவில் ஃபோரியர் உச்சத்தில் நிற்கிறார் ;
அதன் போக்கை பரிணாம வளர்ச்சியின் நான்கு கட்டங்களாகப் பிரிக்கிறார் . அடிமை சமுதாயம், தந்தை வழி சமுதாயம், காட்டுமிராண்டி சமுதாயம், நாகரிக சமுதாயம். கடைசியாகக் குறிப்பிட்டது இன்றைய முதலாளித்துவ சமுதாயம் போன்றதுஎன்பார் ஏங்கெல்ஸ். மனித சமுதாயத்தின் இயக்க விதிகளையும் , சமூக ,உலகை ஆட்கொள்ளும் விதிகளையும் முதலில் கண்டு சொன்னவர் ஃபோரியரே என்பார் மார்க்ஸ் .

முதலாளித்துவத்தை அதன் விஷத்தன்மை கொண்ட சமூக அமைப்புகளோடு ஒழித்துக் கட்ட வேண்டும் ;அரைகுறை நடவடிக்கை மூலம் அதனை திருத்த முடியாதுஎன்பார் ஃபோரியர் . அவர் ஒரு பொருள் முதல்வாதி அல்ல. ஆயினும்அரசு, தத்துவம், மதம் விஞ்ஞானம், நன்னெறி என அனைத்தும் ஆளும் வர்க்கத்திற்கே தொண்டூழியம் புரிகின்றனஎன எடுத்துக்காட்டத் தவறவில்லை .முதலாளித்துவ சமுதாயத்தில் சமூக சுதந்திரம் நிலவுகிறது என்பது முழுமையாகத் தவறாகும் என வாதிட்டு தனக்கு முந்தைய தத்துவஞானிகளைவிட உயர்ந்து நின்றார் போரியர் .முதலாளித்துவ சமூகத்தின் உள் முரண்பாடுகளை சொன்னாலும் ; சுரண்டலுக்கான அடிப்படைக் காரணத்தை சொல்ல இயலவில்லை.ஆயினும் முதலாளித்துவத்தைக் கண்டித்து ; காலில் போட்டு மிதித்தது என்கிற வகையில் ஃபோரியர் உள்ளிட்ட கற்பனா சோஷலிஸ்டுகளின் பங்கு மகத்தானது என்பார் மார்க்ஸ் .

கற்பனாவாத சோஷலிசம் உண்மையான தீர்வைக் காட்டவில்லை; புதிய சமூகத்தை உருவாக்கும் சக்தி எந்த சமூக சக்திக்கு இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டவில்லைஎன்பார் லெனின்.1946 லிலும் 1967 லிலும் பிரான்ஸில் ஃபோரியர் சிந்தனைகள் மீண்டும் விவாதத்துக்கு வந்தன.

(புரட்சித் தொடரும்...)1 comments :

  1. Jayamurugan

    Today I came to know about Fourier by your excellent article...
    Thank You...

Post a Comment