விலங்குகளோடு எனக்கு எந்த விவாதமும் இல்லை .

Posted by அகத்தீ Labels: ,

 



விலங்குகளோடு

எனக்கு

எந்த விவாதமும் இல்லை .

 

அவை

ஒருபோதும் தம்

எல்லையை மீறுவதில்லை

 

தன் பலம் பலவீனம்

இரண்டையும் அறிந்தவை

விலங்குகள் மட்டுமே !

 

நரி  தந்திரமானது

நீதான் சொல்லிக்கொண்டிருக்கிறாய்

உன்னைவிடவா ?

 

’குரங்கு புத்தி’ என்று

நீ செய்யும் அழிச்சாட்டியத்துக்கு

அதன் பெயரை ஏன் இழுக்கிறாய் ?

 

மூர்க்கனும் முதலையும்

கொண்டது விடாது என்கிறாய் ?

சரியா மூடனே !

 

 ‘முதலைப் பண்ணை ‘ காட்சிக்கு மட்டுமே

  ‘மதவெறி சாதி வெறி மூர்க்கப் பண்ணையாக’

தேசமே ஆனதெப்படி ?

 

மனித வியாபாரத்தை

 ‘குதிரை வியாபாரம்’ என்கிறாய்

விலங்குகள் அறியா வித்தை அது .

 

 ‘கர்ஜிப்பது’ , ‘கனைப்பது’ ,  ‘ஊளையிடுவது’

எல்லாம் விலங்குகள் உரிமை

நீ ஏன் காப்பி அடிக்கிறாய் ?

 

முதலில் மனிதத்தைப் படி

மதம் பிடிக்காத

மனிதனாக முயற்சி செய் !

 

அவ்வளவுதான்…..

 

சுபொஅ.

 


0 comments :

Post a Comment