புத்தகத்தின் நடுவில்...

Posted by அகத்தீ Labels: ,

 





புத்தகத்தின் நடுவில்

மறைத்து வைத்த மயிலிறகு

குட்டி போட்டிருக்குமோ ?

 

மயிலிறகை விசாரித்தால்

மர்மம் விலகிடுமோ ?

உடனே கூண்டிலேற்றுங்கள் !

 

துட்டுக்கு போட்ட குட்டிகளென

சுட்டு விரலால் மெல்ல

தள்ளிவிட முடியுமோ ?

 

அறிவு வீட்டுக்கு கொள்ளிவைக்க

உள்ளுக்குள் புகைந்த நெருப்போ

நெடுநாள் வன்மம் வைத்த தீயோ !

 

சுபொஅ.

0 comments :

Post a Comment