பொம்மைகள்
[ குழந்தைகள் தினச் செய்தியைத் தொலைகாட்சியில் பார்த்துக் கொண்டிருந்த போது நினைவில் வந்த கவிதையைப் பகிர்ந்தேன் . அவ்வளவேதான்…. வேறொன்றுமில்லை… ]
[1]
குழந்தைகள் திருவிழாவில்
அவர்களின் ஆயுத விமானங்கள்
குண்டுகளுக்குப் பதிலாக
பொம்மைகளைப் போட்டன .
விற்பனை நிபுணர்கள் சொன்னார்கள்
“ இது –
உலக மக்களிடையே
ஒரு நல்லெண்ணத்தை ஏற்படுத்தும்”
உலகம் முழுவதும்
இது மிகப்பெரும் மதிப்பை
உருவாக்கத்தான் செய்தது .
[2]
அதே விமானங்கள்
பதினைந்து நாட்களுக்கு முன்
பொம்மைகளைப் போட்டுவிட்டு,
இப்போது ,
குண்டுகளைப் போட்டிருந்தால்
என் இரு குழந்தைகளுக்கும்
உங்கள் தயவில்
அந்த இரண்டு வாரங்களுக்கு
விளையாட – ஏதாவது
கிடைத்திருக்கும் .
[ வியடநாம் நாட்டில் குழந்தைகளுக்கான பண்டிகை நடந்த அன்று …அமெரிக்க ஆயுத விமானங்கள் , எந்தக் கிராமங்கள் மீது இதுவரை குண்டுகள் வீசினவோ ,அதே விமானங்கள் அந்த கிராமங்களின் மேல் சிறுவர்களுக்கான பொம்மைகளை வீசின.]
ஆஸ்திரேலியக் கவிஞர் எரிக் ப்ரைட் எழுதியது . மொழியாக்கம் : சூரிய தீபன் .
இன்று அசை போட்ட்து : சுபொஅ.

0 comments :
Post a Comment