சொர்க்கம் எவ்வளவு தூரம் ?

Posted by அகத்தீ Labels:

 


 

சொர்க்கம் எவ்வளவு தூரம் ?       

அப்பாவி பக்தன் தெரியாமல் கேட்டான் .

 

ஐநூறு ரூபாய் கொடுத்தால்

வெகு தொலைவில் ஒரு கட்டத்தில் …

ஆயிரம் ரூபாய் கொடுத்தால்

அடுத்து ஒரடி முன்கட்டம்…

 

ஐயாயிரம் ரூபாய் கொடுத்தால்

இன்னும் ஒரு கட்டம் முன்னால்…

பத்தாயிரம் ரூபாய் கொடுத்தால்

மேலும் ஒரு கட்டம் முன்னாடி…

 

ஐம்பாதயிரம் , ஒரு லட்சம் ரூபாய் எனில்

அதற்கேறப மேலும் மேலும் முன்னால்..

பத்து லட்சமும் அதற்கு மேலும் வழங்கினால்

சொர்க்கம் மடியில் …

 

மதம் – போதை – ஆட்டம் விடிய விடிய

சாமி யார்.. சாமி யார் … சாமி யார் ?

அது தெளியாதவரையில் தான்

சாமியார்கள் இராத்திரிகள் சொர்க்கமாகும் .

 

சொர்க்கம் எவ்வளவு தூரம் ?           

அப்பாவி பக்தன் தெரியாமல் கேட்டான்

 

சுபொஅ.

15 /02 /26 .

 


0 comments :

Post a Comment