‘வீட்டுக்கு ஒரு கடை’
ஒவ்வொரு தெருவிலும்
யார் வகுத்த திட்டம் ?
பிழைப்பின்
நிமித்தமோ ?
காய்கறிக்
கடையில்
கருவாடும்
கரம் மசாலாவும்
பெட்டிக்
கடையில்
சுடச்சுட
பஜ்ஜியும் போண்டாவும்
குட்டி டெக்ஸ்டைல்
கடையில்
குடையும்
செருப்பும்
பூக்கடையில்
கீரைக்கட்டும்
டிபன் செண்டரில்
பேன்ஸிஐட்டமும்
கலந்து கலந்து
கடை திறந்தும்
கொள்வாரின்றி
குந்தி இருந்து
குட்டி போட்ட
வட்டிக் கடனில்
கைமாறி கைமாறி
முகம்மாறி
தொலைந்து
போனவர்களையும்
தொலைந்து
கொண்டிருப்பவர்ளையும்
எந்தக் கணக்கில்
வரவு வைப்பது ?
’ அச்சா தீன்’
கனவுக் கணக்கிலா ?
சுபொஅ.
14/07/24.
0 comments :
Post a Comment