பார்க்க வேண்டிய அன்னபூரணி !
“அன்னபூரணி” என்கிற தலைப்பை பார்த்ததும் ஒரு சாமி
படமாக இருக்குமோ என எண்ணினேன் . அது அப்படி இல்லை என அறிந்தேன் .ஆயினும் படம் பார்க்கவில்லை
.நயனதாரா மீதும் படத்தின் மீதும் இந்துவெறியர்கள் சேறு வாரி இறைப்பதையும் வழக்குப்
போடுவதையும் பார்த்தபின் நேற்று [ 08/01/2024] நெட்ஃளிக்ஸில் படம் பார்த்தேன். ஒரு ஐய்யங்கார் ஆத்துப்பெண் சிறந்த
செப்பாக [ CHEF ] மாறுவதற்கான போராட்டம் ; தோள் கொடுக்கும் ஒரு முஸ்லீம் நண்பன்,உணவு
அரசியல் ; சினிமா மசாலாவோடு பெண் வெற்றி பெறுவதைக் காட்டுவது சிறப்பு . சில காட்சிகள்
மெகா சிரியல் ஒன்றை நினைவூட்டினாலும், எல்லோரும் பார்க்க வேண்டிய படம்தான் . மதவெறியர்
வயிறு எரியட்டும் !
ஒரு வரிக் கதையாகச் சொல்வதெனில் “சேஷம் மைக்கில் ஃபாத்திமா”
கால்பந்தாட்ட வர்ணணையாளராக விரும்பும் ஒரு முஸ்லிம் பெண்ணின் கதை. சுவாரசியமான மலையாளப் படம். அன்னபூரணி செப்பாக விரும்பும் சனாதன ஐய்யங்கார் ஆத்துப் பெண்ணின் கதை .
இரண்டும் பழமைவாதத்தை உடைக்கும் படம்தான் . ஆனால் அன்னபூரணிக்கு மட்டும் எதிர்ப்பு
ஏன் ? ஐயங்கார் ஆத்துப்பெண் அசைவம் சமைப்பதை சுவைப்பதைக் காட்டுவதுதானோ ?
படம் பார்த்து முடிவு சொல்லுங்கள் !
சுபொஅ.
09/01/2024.
0 comments :
Post a Comment