உன் கொள்ளுத்
தாத்தா பாட்டி போன்றா நீ வாழ்கிறாய் ? இல்லவே இல்லை ! அதனினும் மேம்பட்ட வாழ்வுதான்
உன்னுடையது.
அடங்கிப்
போயா இதனை நீ பெற்றாய் ? இல்லவே இல்லை .
உன் கொள்ளுத்
தாத்தாவை உன் தாத்தா மீறினார் ,
உன் தாத்தாவை
உன் அப்பா மீறினார் ,
உன் அப்பாவை
நீ மீறினாய் ,
உன்னை உன்
வாரிசுகள் மீறுகிறார்கள் ,
நாளை அவர்களை
அவர்களின் வாரிசுகள் மீறுவார்கள் .
இதுதான் வாழ்க்கை
.
எல்லாம் மாறும்
. மாறதது எதுவுமில்லை.
மாறாத பண்பாடோ
,பழக்க வழக்கமோ ,உணவோ ,உடையோ ,நாகரீகமோ ,கல்வியோ , அறிவோ ,மருத்துவமோ , மனோநிலையோ
,புனைவோ ,கனவோ எதுவுமில்லை .எல்லாம் மாறும் .
அடக்குமுறை
,பாசிசம் ,ஜனநாயகம் , நியாயங்கள், ஒடுக்குமுறை ,சிம்மாசனங்கள் எல்லாம் மாறும் .ஆம்
எல்லாம் மாறும் !
தகர்க்க முடியாத
சிம்மாசனங்களும் கொடுங்கோல்களும் எங்கும் இல்லை .
தேவையற்ற
பஞ்சாங்கப் பழமைச் சிந்தனையை எரியூட்டுக !
புத்தம் புதிய
சிந்தனைக்கு உரம் போடுக !
தொடரும் மனிதகுல
வரலாற்றுச் சங்கிலியில் நீயும் ஒரு கண்ணி ! அவ்வளவுதான்….
போகியோ போகி
!
சுபொஅ.
13/01/2024.
0 comments :
Post a Comment