“மாட்டுக்கறியை தடை செய்தால்
எனக்கென்ன நான் மாட்டுக்கறி சாப்பிடமாட்டேன்.”
“பன்றிக்கறியை தடை செய்தால்
எனக்கென்ன நான் பன்றிக்கறி சாப்பிடமாட்டேன் .”
“கருவாட்டை தடை செய்தால்
எனக்கென்ன அதன் வாசமே எனக்குப் பிடிக்காது.”
“முட்டையை தடைசெய்தால் எனக்கென்ன
நான் முட்டையையை விரும்புவதில்லை.”
“ஆட்டுக்கறி , கோழிக்கறி தடை
செய்தால் எனக்கென்ன நான் சாப்பிடப் போவதில்லை.”
“மீனைத் தடைசெய்தால்
எனக்கென்ன மீன் நாற்றமே எனக்குப் பிடிக்காது”
“வெங்காயம் வெள்ளைப் பூண்டை
தவிர்த்தால் எனக்கென்ன எனக்கு அது வேண்டாம்.”
“பனங்கிழங்கு ,சேப்பங்கிழங்கு ,கருணைக் கிழங்கு சாப்பிடமாட்டேன் பெருமாளுக்கு ஆகாது.”
“சனி ,ஞாயிறு
,திங்கள் ,செவ்வாய் ,புதன் ,வியாழன் ,வெள்ளி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சாமிக்கு உரியது அன்று புலால் சாப்பிடமாட்டேன்.”
“வருடம் முழுவதும்
பகவானுக்கு உரியது அன்ன ஆகாரமின்றி அமைதியில் இருப்பேன்.”
“அவ்வப்போது மாட்டு மூத்திரம் ,மாட்டுச்சாணி மட்டும் சாப்பிடுவேன்...”
“உண்மையான இந்து வேறு
எப்படி இருக்க முடியும் ?”
“போய்யா! உன் மதமும் புண்ணாக்கும்… நான் மனிதனாக இருந்துவிட்டுப் போகிறேன் ; என் உணவு என் உரிமை .”
”என் உணவில் ஓர் கவளம் சாப்பிடும் அன்பான கடவுளே எனக்குத் தேவை . இருந்தால் முகவரி தாருங்கள் !அன்னபூரணி !”
சுபொஅ.
12/01/2024.
0 comments :
Post a Comment