புல்டோசருக்கு
தெரியுமாம்
எது முஸ்லீம்
வீடென …
கொலைவாளுக்குத்
தெரியுமாம்
எந்த உடல்
பட்டியல் இனமென…
தீ நாக்குக்குத்
தெரியுமாம்
எது தலித்
குடிசை என…
கடப்பாரைக்குத்
தெரியுமாம்
எந்த கடவுள்
எதிரியென …
உங்களுக்குத்
தெரியுமா ?
மனிதம் என்பது
யாதென…
சுபொஅ.
13/8/2023.
0 comments :
Post a Comment